முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் 25 ஆயிரம் பேர் வேட்பு மனுதாக்கல்:-சோ.ஐயர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.- 27 - தமிழகத்தில் இதுவரை 25,723 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ.ஐயர் தெரிவித்துள்ளார். துகுறித்து மேலும், அதிகமாக வேட்புமனுக்கள் தாக்கலாகும் நாளில் கூடுதல் பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சோ.ஐயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-​ தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள்  அக்டோபர் 17 மற்றும் 19​தேதி ஆகிய நாட்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர்  செப்டம்பர் 21-ந்தேதி அன்று அறிவித்து, தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். செப்டம்பர் 22-ந்தேதி அன்று முதல் வேட்புமனு பெறப்படும் என்றும் செப்டம்பர் 29-ந்தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், அனைத்து பதவிகளுக்கும் செப்டம்பர் 24-ந்தேதி (சனிக்கிழமை) வரை மொத்தம் 25,723 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில நாட்களிலேயே வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதை அதிகம் பேர் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்புமனுக்களை பெறும் தேர்தல் அலுவலர்கள், அதிகமாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கக்கூடிய நாட்களில், கூடுதல் பணியாளர்களை இதற்கென அமர்த்தி சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வருகின்ற வேட்பாளர்களின் மன உணர்வுகளுக்கு, மதிப்பளிக்கும் வகையில் விதிகளுக்குட்பட்டு தாமதமின்றி வேட்புமனுக்களை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்