முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கர் பற்றி விமர்சனம் பாக். வீரர் சோயப் அக்தருக்கு வாசிம் அக்ரம் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

கராச்சி, செப். - 27 - டெண்டுல்கர் பற்றி விமர்சனம் செய்துள்ள பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தருக்கு முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும் மலிவான விளம்பரத்தை அவர் தேடுகிறார் என் றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், ஊக்கமருந்து விவகாரம், பந்தை சேதப்படுத்தியது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர் தற்போது, தனது சுயசரி தை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய உங்கள்.... என்ற அந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பற்றி விமர்சித்துள்ளார். தனது வேகப் பந்து வீச்சை எதிர்கொள்ள டெண்டுல்கர் திணறுவார் என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்தரி ன் இந்த கருத்துக்கு பதில் அளிக்க டெண்டுல்கர் மறுத்து விட்டார். அது தனது கெளரவத்திற்கு இழுக்கானது என்று சுருக்கமாக கூறிவிட்டார். இந்நிலையில், அக்தரின் அந்த கருத்துக்கு பாகிஸ்தானிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த அணியின்  முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் அளித்துள்ள பேட்டியில் அக்தரை கண்டித்துள்ளார்.
அந்த பேட்டியில், இது புத்தகத்தை விற்பனை செய்தவதற்கான தந்திர ம் மட்டுமே. இதன் மூலம் மலிவான விளம்பரத்தை அக்தர் பெற்றுள்ளார். டெண்டுல்கரை பற்றி விமர்சிப்பதை அக்தர் தவிர்த்து இருக்க லாம் என்று குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு எதிர்ப்பு வலுத்து வருவதன் காரணமாகவோ, என்னவோ தற்போது அக்தர் திடீரென பல்டி அடித்துள்ளார். டெண்டுல்கரைப் பற் றி தான் தவறாகவோ, தரக்குறைவாகவோ எழுதவில்லை. அவர் ஒரு மகத்தான வீரர்.
எனது பந்து வீச்சின் மூலம் பல போட்டிகளில் டெண்டுல்கரைப் பய முறுத்தினேன் என்று மட்டுமே எழுதியுள்ளேன் என விளக்கம் தந்துள்ளார். உலகக் கோப்பை போட்டியில் அக்தரின் பந்தை டெண்டுல்கர் ஓரு போட்டியில் அடித்து நொறுக்கினார். இதனை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது என்று அக்தர் அந்த ஆட்டம் குறித்து கூறியது நினைவு கூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்