முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி-ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். - 28 - திருவள்ளூர் அருகே லாரி விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், வெள்ளியூர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாலையோரத்தில் உள்ள உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திருக்கணச்சேரி குவாரியில் இருந்து மண் ஏற்றி வந்த தனியார் லாரி ஒன்று மோதியதில் மோகன்தாஸ், ராஜ்குமார் மற்றும் முனுசாமி ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயருற்றேன். இந்த மூன்று மாணவர்களின் அகால மரணத்தால் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், ஒரு மாணவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
லாரி விபத்தில் சிக்கி உயிர் இழந்த மாணவர்கள் மோகன்தாஸ், ராஜ்குமார் மற்றும் முனுசாமி ஆகியோர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், இந்த விபத்தில் காயம் அடைந்துள்ள மாணவர்களுக்கு தலா 15,000 ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்