முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் புயல் மழை 18 பேர் பலி: 35 பேர் மாயம்

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

மணிலா,செப்.- 29 - பிலிப்பைன்சில் ஏற்பட்ட புயல் மழை காரணத்தால் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். 35 பேர் மாயமாகி உள்ளனர்.  பசிபிக் கடலில் ஏற்பட்ட புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை கடுமையாக தாக்கியது. 120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்த புயல் மணிலா விரிகுடா பகுதியின் சுற்றுப்புறங்களை தாக்கி கடும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடும் மழையால் பெரும்பாலான அணைக்கட்டுகள் நிரம்பியுள்ளனர். இதனால் மரங்கள் மற்றும் வீடுகள் இடிந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சீரமைப்பு பணியில் மீட்பு குழுவினர் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். லூசர் நகரில் ஏற்பட்ட நில அதிர்வு வெள்ளத்தால் 60 க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகம், மணிலா ஓசன்பார்க் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடற்கரையில் உள்ள ஓட்டல் ஒன்றின் மீது பெரியளவில் கடல் அலை வீசியதால் ஓட்டலுக்குள் கடல் நீர் புகுந்தது. ஓட்டலில் தங்கியிருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த புயலில் 18 பேர் பலியாகி உள்ளனர். 35 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்நிலையில் ரிசார்ட் பகுதியை மற்றொரு புயல் தாக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட புயலால் 200க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்