முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமோற்சவ பெருவிழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, செப்.- 29 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று (புதன்கிழமை) அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இதுபற்றிய விவரம் வருமாறு:​ திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் அக்டோபர் 7​ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மொத்தம் 9 நாட்கள் நடைபெறுகிறது. நேற்று (புதன்கிழமை) கோவிலில் அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை உற்சவரான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, nullதேவியுடன் தங்க திருச்சி வாகனத்தில் வைத்து நான்கு மாடவீதிகளில் வீதிஉலா நடக்கிறது. அதன்பிறகு, கோவிலுக்குள் உற்சவர்கள் எடுத்துச் செல்லப்படுவார்கள். அதைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் கோவிலுக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது. இதனையடுத்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, nullதேவிக்கு விலை உயர்ந்த தங்க நகைகள், வைரம், வைடூரியம் மற்றும் பல்வேறு நகைகள் அணிவிக்கப்பட்டு பெரிய சேஷ வாகனத்தில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை நான்கு மாட வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது. இரவு 1 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினசரி சாமி வீதி உலா நடைபெறும்.
3​ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் நண்பகல் 11 மணி வரை மோகினி அவதாரத்தில் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, nullதேவியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை விழா இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடக்கிறது. அப்போது கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமிக்கு விலை உயர்ந்த தங்க நகைகள், வைரம், வைடூரியம் மற்றும் பல்வேறு நகைகள் அணிவிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான வருகிற 7​ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல் காலை 7.30 மணி வரை பல்லக்கு உற்சவம் மற்றும் திருச்சி உற்சவம், காலை 7.30 மணி முதல் காலை 10 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், சக்ரஸ்நானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இரவு 10 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்