முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளரும் நாடுகள் ஆயுத கொள்முதல் செய்ததில் இந்தியா முதலிடம்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.- 30 -  உலகில் வளர்ந்து வரும் நாடுகள் தங்களுடைய பாதுகாப்புக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுத கொள்முதல் செய்ததில் இந்தியா முதலிடம் வகிக்கிறது அமெரிக்க பாராளுமன்றத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் இந்தியா 5.8 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத கொள்முதல் செய்துள்ளது. அடுத்தபடியாக சீனாவையொட்டி உள்ள தைவான் 2.7 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத கொள்முதல் செய்துள்ளது. பாகிஸ்தான், சீனாவின் தொல்லையால்தான் இந்தியா இந்த இளவுக்கு ஆயுத கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. தைவானும் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அதிக அளவுக்கு ஆயுத கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. இதர நாடுகளின் இறையாண்மையை மதிக்க தெரியாமல் சில நாடுகள் நடந்து கொள்வதால்தான் இவ்வளவு அளவுக்கு அதிகமான தொகை ஆயுதங்களுக்காக செலவிட வேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை என்று மாறுமோ தெரியவில்லை. இந்தியாவுக்கு அதிக அளவு ஆயுதங்களை விற்பனை செய்ததில் தொடர்ந்து முதலிடம் வசிக்கிறது. அதனையடுத்து அமெரிக்கா வகிக்கிறது. அதேசமயத்தில் தற்போது நவீன் தொழில்நுட்ப வசதியுடனான ஆயுதங்களை பிரான்ஸ், இஸ்ரேல்,அமெரிக்காவிடம் இருந்து இந்திய பெறத்தொடங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா அடுத்தபடியாக வெளிநாடுகளில் இருந்து ஆயுத கொள்முதல் செய்கிறது. இதற்கு காரணம் முதலில் ஈராக்கிடம் இருந்து அச்சம் இருந்தது. தற்போது ரானிடம் இருந்து அச்சம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடத்திலும் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு மட்டும் உலக அளவில் 40.4 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயத ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. தெற்காசியாவில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் தொடர்ந்து நிலவு வருவதால் அந்த நாடுகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதியுள்ள ஆயுதங்களை ரஷ்யா விற்பனை செய்து வருவதற்கு அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் டாலர் என்பது 100 கோடி டாலராகும். ஒரு கோடி டாலர் மதிப்பு தற்போது ரூ.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளிடையே மனப்பக்குவம் இல்லாத காரணத்தால் இவ்வளவு தொகையை ஆயுதங்களுக்காக செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் மக்களின் முன்னேற்றம்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்