முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் மரணம் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 1 -மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சோமசுந்தரம் (எ) கணேசன் மரணமடைந்ததற்கு  முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- மதுரை புறநகர் மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. உடன் பிறப்பு சோமசுந்தரம் (எ) கணேசன் என்பவரும் உடன் சென்றிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி உள்ளது. என் உயிரினும் மேலான எனதருமை அ.தி.மு.க. உடன் பிறப்புகள் எந்தப் பணியை மேற்கொண்டாலும் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என்று அன்பு கட்டளை இடுகிறேன். அன்புச் சகோதரர் சோமசுந்தரம் (எ) கணேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago