முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கருணாநிதி வாழ்த்து

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,அக்.- 1 - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடைத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதி இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் நத்தினி முகர்ஜியை 54,213 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதற்கு வாழ்த்து தெரிவித்து கருணாநிதி அனுப்பி உள்ள செய்தியில்,  பவானிபூர் தொகுதி இடைத் தேர்தலில் 54 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி மேற்கு வங்க முதல்வராக தாங்கள் அடியெடுத்து வைத்திருப்பதற்கு கிடைத்த வெற்றி. உங்களின் மகத்தான வெற்றிக்கு மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago