முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாநகராட்சிக்கு அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் வேலுமணி பேச்சு

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

கோவை, அக்.- 1 - கோவை மாநகராட்சிக்கு ஏற்ற திறமையான நிர்வாகி முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கோவை மாநகராட்சி அ.தி.மு.க மேயர் வேட்பாளர் பிரச்சாரத்தை துவக்கி வைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி போட்டியிடுகிறார். இதை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதய தெய்வம் மாளிகையில் உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அலுவலக திறப்பு விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் தா.மலரவன் எம்.எல்.ஏ மாநில அண்ணா தொழில் சங்க செயலாளர் சின்னச்சாமி மேயர் வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோவை இடையர் வீதி 80-வது வார்ட்டில் உள்ள ஸ்ரீ அய்யா சுவாமி அட்சய கணபதி கோவிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தா.மலரவன் மேயர் வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி கவுன்சிலர் வேட்பாளர்கள் ஆதி நாராயானின், அம்மன் அர்ச்சுணன் ஆகியோர் வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கு பரிவட்டம் கட்டி குருக்கள் ஆசீர் வதித்தார். இதை தொடர்ந்து அருகில் இடையர் வீதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்கு வசிக்கும் வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்தனர். பின்னர் திறந்த வேனில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.  அப்போது அவர் பேசியதாவது. கோவை மாவட்டம் மீது அம்மாஅலவு கடந்த பாசம் வைத்துள்ளார். கோவை மாநகர மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கேட்காமலேயே செய்து கொடுப்பார் அம்மாவின் ஆசியோடு முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி மேயர் பதவிக்கு போட்டியிருகிறார். அவர் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர் கோவை மாவட்டம் மட்டுமல்ல கோவை மாநகராட்சிக்கு என்ன என்ன தேவை என்பது அவருக்கு நன்றாக தெரியும் திறமையான நிர்வாகி தமிழ்நாட்டிலே கோவை மாநகராட்சி அனைத்து துறைகளிலும் எடுத்துக்காட்டாக திகழ செய்யவார். கடந்த காலத்தில் நமது முதல்வர் அம்மா அவர்கள் கொண்டு வந்த இரண்டாவது பில்லூர் குடிநீர் திட்டம் பாதாள சாக்கடை திட்டம வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டது. அதை அம்மாவின் அனுமதியோடு உடனடியாக நிறைவேற்றப்படும் மேலும் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் எனவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் செ.ம.வேலுச்சாமியை வெற்றி பெற செய்வும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்