முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி தேர்தல் பணி கலெக்டர் சகாயம் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,அக்.- 1 - மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சகாயம் திருப்பரங்குன்றம், திருமங்கலம், செல்லம்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட கோரிப்பாளையம், செல்லூர், பாண்டிபஜார், பெரியார் பஸ்நிலையம், தெற்குவாசல், தெற்குமாரட் வீதி, பாண்டிய வெள்ளாளர் தெரு, திருமலை நாயக்கர் மகால், சிஎம்ஆர் ரோடு, புதுராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம், அண்ணாநகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று மாநகராட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.    தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு கொண்டு இருக்கிறார்களா, விளம்பரங்கள், சுவரொட்டிகள்,பேனர்கள் போன்ற பல்வேறு வகையான விளம்பர பணிகள் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக நடைபெறுகிறதா என்பதை நேரிடையாக ஆய்வு மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்