முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியடிகள் பிறந்தநாள் - காமராஜர் நினைவுநாள் சரத்குமார் அஞ்சலி

திங்கட்கிழமை, 3 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 3 - காந்தியடிகள், காமராஜர் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. இது பற்றி விபரம் வருமாறு:- ச.ம.க. சார்பில் அஞ்சலி:- காந்தி பிறந்தாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் துணைத்தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ. தலைமையில் சென்னை கிண்டியிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அருகிலுள்ள காமராஜர் நினைவிடத்தில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கொள்கைபரப்புச்செயலாளர் ஆர்.ஜெயப்பிரகாஷ், துணைப்பொதுச்செயலாளர் ஏ.என்.சுந்தரேசன், வர்த்தகரணி செயலாளர் எஸ்.ஆர்.வி.ரத்னம், மாவட்ட செயலாளர்கள் எஸ்.எஸ்.அமுதன், எம்.ஏ.சேவியர், எஸ்.சுதாகர், கே.ஜே.நாதன், சமத்துவ சரவணன், ஜே.பாபு, சி.ஆஸ்டின், பி.ஜே.கோவிந்தராஜ், டி.தமிழ்ச்சாமி, மகளிரணி செயலாளர்கள் சர்மிளா, சுமித்ரா, கார்த்திகைக்கனி ஆகியோர் கலந்து கொண்டார்கள். மூ.மு.க. சார்பில் அஞ்சலி:-  தேசத்தந்தை காந்தியடிகளின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (02.10.2011) சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் 37-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை, கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடத்திலும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பாக கழக நிறுவனர் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ச.இசக்கிமுத்து, மாநில அமைப்புச்செயலாளர் இரா.பிரபு, மாநில இளைஞரணிதுணைச் செயலாளர் பெரியதுரை, தென் சென்னை மாவட்டத் தலைவர் ப.செல்வக்குமார், மாவட்டச் செயலாளர் சு.திருநாவுக்கரசு, மாவட்ட இணைச் செயலாளர் து.சண்முகவேல் பாண்டியன், விருகை பகுதி சுரேஷ், வட சென்னை மாவட்டச் செயலாளர் கேம்.எம்.சங்கரபாண்டியன், அதியமான் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மற்றும் தலித் முன்னணி தலைவர் குமரிஅருண் தலைமையில் கட்சியினர் காமராஜர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்கள். காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்