முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.7 - ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பாவை ஆதரித்து பிரசாரம் செய்த போது தெரிவித்தார். மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுக மேயர் வேட்பாளர் ராஜன்செல்ப்பாவை ஆதரித்து தத்தனேரி பகுதியில் நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பிரசாரம் துவங்கினார். கொன்னவாயன் சாலை, பாத்திமா கல்லூரி, கூடல்நகர், கரிசல்குளம் ஆகிய பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் தெருத்தெருவாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது, கடந்த 15 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சியை ஆண்டு வந்த திமுகவினர் இந்த பகுதிகளுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செய்யவில்லை. இந்த பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதியாகவே உள்ளது. எனவே இந்த பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அதற்கு கடந்த சட்டமன்ற தேர்தலை போல மாநகராட்சி தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றியை பெற வேண்டும். அப்போதுதான் இந்த பகுதிகள் சரிசெய்யப்படும். அரசின் திட்டங்களும், சலுகைகளும் மக்களுக்கு எளிதில் கிடைப்பதற்கு வசதியாக இருக்கும். தமிழக முதல்வர் அம்மா அறிவித்த அரசினுடைய திட்டங்கள் அனைத்தையும் உங்கள் வீடுகளுக்கு வந்து சேர்க்க முடியும். எனவே தான் உங்களிடம் அதிமுகவுக்கு வாக்குகளை கேட்டு இங்கு வந்துள்ளேன். எனவே இந்த மாநகராட்சி தேர்தலில் அதிமுகவை அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். எதிர்த்து வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை முறையாக செயல்படுத்த இந்த வெற்றி ஒரு வாய்ப்பாக அமையும்.

   முதல்வர் அம்மா அறிவித்துள்ள இலவச திட்டங்கள் அனைத்தும் ரேசன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்த தேர்தலில் அதிமுகவை நீங்கள் வெற்றி பெற செய்தால் தமிழகத்திலேயே முதன்மை மாநகராட்சியாக மாற்றி காட்டுவோம்.  இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின் போது மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மாவட்ட செயலாளர்கள் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் அ.மா.பரமசிவம், வளர்மதி ஜெபராஜ், எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், நடிகர் குண்டு கல்யாணம், முன்னாள் எம்பிக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், எஸ்.முத்துமணி, அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, புறநகர் மாவட்ட தொழிற் சங்க செயலாளர் அமாவாசை, முன்னாள் எம்எல்ஏ சீனிவேல், ஐபிஎஸ் பாலமுருகன், சிமெண்ட் கடை சண்முகம், நிலையூர் முருகன், வழக்கறிஞர்கள் ஜெயராமன், ரமேஷ், அதிமுக வார்டு வேட்பாளர்கள் எம்.தாஸ், கேசவபாண்டியம்மாள், ஆர்.சரவணன், பி.சாந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago