முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரத்திற்கு ஐ.பி.எஸ். அதிகாரி மனைவி கடிதம்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத். அக்.7. - எனது கணவரை ஒரு தீவிரவாதியை போல போலீசார் நடத்துகிறார்கள் என்று குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ள  ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி,  மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எழுதியுள்ள இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குஜராத் கலவரத்திற்கு பிறகு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த சஞ்சீவ் பட் என்ற எ.பி.எஸ். போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு அகமதாபாத்தில் உள்ள கிரைம் பிராஞ்ச் போலீஸ் லாக்- அப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது கணவரின் நிலை குறித்து சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வீட்டா ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். 

அதில் தனது கணவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஸ்வீட்டா மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பத்திற்கு இரண்டாவும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தனது கணவர் தொடர் குற்றங்களை செய்தவர் அல்ல, மேலும் அவர் ஒரு கிரிமினலும் அல்ல. ஆனால் கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அவர் ஒரு தீவிரவாதியை போல நடத்தப்படுகிறார். 

அசிங்கமான சுகாதாரமற்ற ஒரு பாழடைந்த அறையில் அவர்  அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார் என்று அந்த 2 வது கடிதத்தில்  ஸ்வீட்டா குறிப்பிட்டுள்ளார்.

உணவு , தண்ணீர் இல்லாமல் கடுமையான குற்றச்செயல்களை புரிந்த கைதிகளோடு அவர் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.

தனது கணவர் மோசமான முறையில் நடத்தப்படுகிறார் என்பதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ சி.டி.யையும் அந்த கடிதத்தோடு ஸ்வீட்டா அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் தனது கணவர் மீது மேலும் பல பொய்யான வழக்குகளில்  போலீசார் சிக்க வைப்பதற்கான ஆபத்துக்களும் இருக்கின்றன என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரின் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் பெருத்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அது தனக்கு பெருத்த கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது கணவரை பழிவாங்கும் நடவடிக்கையாக குஜராத் போலீசார்  கொடுமைப்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது கணவரை இழிவான அவமானகரமான வார்த்தைகளால் குஜராத் போலீசார் திட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!