முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் தீ விபத்து

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் அக் 7 ராமநாதபரம் அரசு தலைமை மருத்துவமனையில் டிரான்ஸ்பார்மரில்  மின்கசிவால்  திடீர் தீவிபத்து ஏற்பட்டது. சிக்கிக்கொண்ட 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிப்பின்றி மீட்கப்பட்டனர்.

ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பிரசவ வார்டு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. கடும் புகை மண்டலம் ஏற்பட்டதால் அங்கு தங்கியிருந்த நோயாளிகளும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களும், குழந்தை பெற்ற பெண்களும் வெளியே ஓடினர். மற்ற நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் துாக்கி வந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 200 க்கும் மேற்பட்ட நோயாளிகளும் எந்தவித பாதிப்பம் இன்றி மீட்கப்பட்டனர். நள்ளிரவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் அனைத்து கட்சி கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது

ராமநாதபுரம் அக 7 உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள குறித்த அனைத்துகட்சி கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குபதிவு எந்திரம் குறித்தும் விளக்கப்பட்டது.

        உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெற இருப்பதை முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான முஜிபுர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்ட்டுகள் கலந்துகொண்டனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்றவை பற்றி தேர்தல் அலுவலர் விளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும் நகராட்சி பகுதிகளில் மின்ணணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருப்பதால் அவை குறித்து விளக்க பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அஇஅதிமுக சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் சாமிநாதன் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தேர்தல் அலுவலர் முஜிபுர்ரஹ்மான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகள் குறித்து இந்த அனைத்துகட்சி கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்கள் செய்யக்கூடாதவை எவை என்பது குறித்தும் விளக்கிகூறப்பட்டது. தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்