முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரம் - தயாநிதி மாறன் விரைவில் கைது செய்யப்படுவார்கள்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, அக்.7 - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆயிரம் பக்க ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளதாகவும், கூடிய விரைவில் ப.சிதம்பரம், தயாநிதி மாறன் கைதாவது உறுதி என்று சுப்பிரமணியசாமி சென்னையில் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறியதாவது:- ஆயிரம் பக்க 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதை உச்சநீதிமன்றத்தில் ஆதாரங்களை ஒப்படைத்து விட்டேன். வரும் 10-ந் தேதி இறுதி தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. ப.சிதம்பரம் முதல் குற்றவாளி. அ.ராசா இரண்டாவது குற்றவாளி. இதற்கான ஆதாரங்கள் முழுவதும் கோர்ட்டில் ஒப்படைத்து விட்டேன். 

உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் நேர்மையாக செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். ப.சிதம்பரத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி சென்றுள்ளது. சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஆகவே உண்மைகள் கூடிய விரைவில் வெளிவரும். சோனியா காந்திக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. அதனால் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார். வழக்கு சம்பந்தமான ஆதாரங்களை முழுமையாக கொடுத்துள்ளோம். 

டி.என்.ஏ. பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரைகள் இந்து- முஸ்லிம் ஒற்றுமை பற்றிதான் எழுதினேன். ப.சிதம்பரம் பற்றி விமர்சனம் செய்ததால் டெல்லி போலீசார் என் மேல் வழக்கு போட்டுள்ளனர். தயாநிதி மாறன் விவகாரமும் விசாரணை நடைபெற்று வருகிறது. நிறைய வழக்குகள் இருப்பதால் தயாநிதி மாறன் கைதாவது தாமதமாகிறது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்