முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சலைட்டுகள் பகுதி காவல் நிலையங்களுக்கு ரூ.120 கோடி நிதி

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. அக். 7 - நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் காவல் நிலையங்களை பலப்படுத்த மத்திய அரசு ரூ. 120 கோடி நிதியை அனுமதித்துள்ளது. நாட்டில் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம்,  ஒரிஸ்ஸா உள்ளிட்ட 13 மாநிலங்களில் நக்சலைட்டுகள் பரவலாக காணப்படுகின்றனர். இவர்கள் அடிக்கடி பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நக்சலைட்டுகலை ஒடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

என்றாலும் நக்சலைட்டுகள் தொடர்ந்து தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் நக்சலைட்டு ஒடுக்க தேவையான நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்க நக்லைட்டுகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் உள்ள 400 காவல் நிலையங்களை மேம்படுத்த ரூ. 120 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்துள்ளது.

இந்த 400 காவல் நிலையங்களில் ஒவ்வொன்றுக்கும் ரூ. 30 லட்சம் வீதம் வழங்கப்படும்.

 புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும் குடியிருப்புக்களை கட்டுவதற்கும், பதுங்கு குழிகளை அமைப்பதற்கும், ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதற்கும் முதல் தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ரூ.  2 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றும் இதில் 1.60 லட்சம் மத்திய அரசு 40 லட்சம் மாநில அரசுகளும் வழங்கும் என்றும்  அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் மத்திய அரசு 71,000 மத்திய துணை ராணுவத்தினரை குவித்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago