சபரிமலை கோயில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி தேர்வு

Image Unavailable

 

திருவனந்தபுரம், அக்.7 - சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தி வரும் 18 ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அதே போல் மாளிகைபுறத்தம்மன் கோவிலுக்கான மேல்சாந்தி தேர்வும் அதே நாளில் நடைபெறவுள்ளது. 

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இவ்வாண்டுக்கான மேல்சாந்தி நியமனத்திற்காக நடத்தப்பட்ட நேர்முக தேர்வில் 47 பேர் பங்கேற்றனர். 

அதே போல் ஐயப்பன் சன்னதி அருகே உள்ள மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கான புதிய மேல்சாந்தி தேர்வுக்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 53 பேர் பங்கேற்றனர். அவர்களில் தகுதியுடையவர்களாக ஐயப்பன் கோவிலுக்கு பத்து பேரும், மாளிகைபுறத்தம்மன் கோவிலுக்கு 13 பேரும் தேர்வாகினர். அவர்களில் தலா ஒருவரை வரும் 18 ம் தேதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் தேர்வாகும் மேல்சாந்தி சபரிமலையிலேயே தங்கி பூஜைகளை நடத்துவார். இந்த பதவி ஓராண்டு காலத்திற்குரியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ