முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறில் அதிர்வலை சோதனை

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

கம்பம், அக். 8 - முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்மின் ஆராய்ச்சியாளர்கள் அணையின் பலம் உறுதித் தன்மை குறித்து அதிர்வு அலை சோதனை நடத்தினர். முல்லைப் பெரியாறு அணையின் பலம் மற்றும் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையிலான உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கு அடுத்தகட்டமாக அணையின் உறுதித் தன்மையை கண்டறிய மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் திரிபாதி தலைமையில் அணைக்கு வந்திருந்த குழுவினர் அணையில் அதிர்வு அலைகள் மூலம் சோதனை நடத்தினர். இந்த ஆய்வு தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் என்றும் குழுவினர் தெரிவித்தனர். 

ஆய்வின் போது தமிழக அணை செயற்பொறியாளர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர் கல்யாண சுந்தரம், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், கேரளத்தின்சார்பில் நீர்ப்பாசன துறை முதன்மை பொறியாளர் லத்திகா, கேரள அணைகள் பாதுகாப்பு குழு தலைவர் பரமேஸ்வர நாயர், செயற்பொறியாளர் டோமிஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்