முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிசாவில் பயங்கர விபத்து: பழங்குடிவாசிகள் 17 பேர் பலி

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புவனேஸ்வரம், அக்.8 - ஒரிசா மாநிலத்தின் தெற்கு பகுதியில் கோராபுத் என்ற இடத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தஷ்மந்த்பூர் என்ற இடத்திற்கு அருகே ஒரு லாரி கவிழ்ந்ததில் பழங்குடிவாசிகள் 17 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். இந்த தகவலை துணை போலீஸ் ஐ.ஜி. சவுமேந்திரா பிரியதர்ஷி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். 

யாத்திரை ஒன்றை பார்வையிட்டு விட்டு தஷ்வந்த்பூரில் இருந்து இந்த பழங்குடிவாசிகள் டிப்பர் லாரியில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்த வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த வாகனம் தொட்டாகுடா என்ற இடம் நோக்கி போய்க் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலும், 6 பேர் தஷ்வந்த்பூர் மருத்துவமனையிலும், 3 பேர் மருத்துவமனை செல்லும் வழியிலும் இறந்து போனார்கள். இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. காண்டிராக்டர்களால் சாலை கட்டுமான பணிக்காக பயன்படுத்தப்படும் டிப்பர் வாகனத்தில் இந்த பழங்குடி வாசிகள் பயணம் செய்தார்களாம். இவர்கள் சென்ற இடம் தொலைதூர இடம் என்பதால் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் டிப்பர் லாரியை பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால் அந்த லாரி திடீரென்று கவிழ்ந்து விட்டது. எப்படி கவிழ்ந்தது என்பது தெரியவில்லை. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்