முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே நடத்தியது பைவ் ஸ்டார் போராட்டம்: தாக்கரே

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

மும்பை, அக். 8 - லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் ஒரு 5 நட்சத்திர போராட்டம் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற தசரா பேரணியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, ஊழலை ஒழிக்க நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் இந்த வழியில் போராடினால் ஊழல் ஒழிந்து விடாது. ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டதை தாக்கரே சுட்டிக் காட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள ஹசாரே, தாக்கரேவுக்கு சரியென்று பட்டதை கூறியுள்ளார். எங்களுக்கு சரி என்று தோன்றுவதை நாங்கள் செய்வோம். ஒருவருக்கு இதை போனஅற அவமதிப்புகளை தாங்கும் ஆற்றல் வேண்டும் என்று ஹசாரே தெரிவித்தார். 

முன்னதாக ஹசாரே போராட்டத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்திருந்தது. தாக்கரேயின் பேரன் ஆதித்யா போராட்டம் நடைபெற்ற ராம்லீலா மைதானத்திலேயே ஹசாரேவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!