முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக்: கெய்ல்-கோக்லி அதிரடி ஆட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், அக். 9 - சாம்பியன்ஸ் லீக் 20 -க்கு 20 போட்டியில் பெங்களூரில் நடந்த முதல் அரை இறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்ச ர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசெளத் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

இந்தப் போட்டியில் பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணி தரப்பில், துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோக்லி இருவரும் அதிரடியாக ஆடி, அணியை வெற்றி பெற வைத்தனர். 

அதிக ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் இரு அணி தரப்பிலு ம் பந்து வீச்சு எடுபடவில்லை. ஆனால் பேட்ஸ்மேன்கள் பவுண்டரியு ம், சிக்சருமாக பந்துகளை பறக்க விட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினர்.  

சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டம் பெ ங்களூரில் உள்ள எம். சின்னசாமி அரங்கத்தில் நேற்று முன் தினம் இர வு நடைபெற்றது. இதில் நியூசெளத் வேல்ஸ் மற்றும் பெங்களூர் ராய ல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. 

முதலில் பேட்டிங் செய்த நியூசெளத் வேல்ஸ் அணி அபாரமாக ஆடி, பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. அந்த அணி இறுதியில் நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்னைக் குவித் தது. 

நியூசெளத் வேல்ஸ் அணியின் துவக்க வீரரான வார்னர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பெங்களூர் அணியை மிரட்டினார். அவர் 88 பந்தி ல் 11 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 123 ரன்களைக் குவித்தார். ஸ்மித் 42 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 62 ரன் எடுத்தார். இந்தப் போ  ட்டியில் வார்னருக்கு இது இரண்டாவது சதமாகும். 

பெங்களூர் அணி தரப்பில், தில்ஷான் மற்றும் அரவிந்த் தலா ஒரு விக் கெட் கைப்பற்றினர். மற்ற பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் கிடைக்க வில்லை. இது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. 

203 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசெளத் வேல் ஸ் அணி பெங்களூர் அணிக்கு வைத்தது. அடுத்து களம் இறங்கிய பெ ங்களூர் அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்னை எடுத் தது. 

இதனால் பெங்களூர் அணி இந்த முதல் அரை இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் (9 பந்து மீதமிருக்கையில்)அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

பெங்களூர் அணி தரப்பில், துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோக்லி இருவரும் அதிரடியாக ஆடி, வேல்ஸ் அணிக்கு பதிலடி கொ டுத்தனர். இந்தத் தோல்வி வேல்ஸ் அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

துவக்க வீரர் கெய்ல் பவுண்டரியும், சிக்சருமாக விளாசித் தள்ளினார். அவர் 41 பந்தில் தலா 8 சிக்சர், 8 பவுண்டரியுடன் 92 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவர் ஹம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். 

அதன் பின்பு ரன் குவிப்பு வேகத்தை கோக்லி அதிகரித்தார். கோக்லி 49 பந்தில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் 84 ரன்கள் அடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். வேல்ஸ் சார்பில் ஹம்மின்ஸ் 4 விக்கெட் எடுத்தார். கோக்லிக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago