முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்! ஹசாரே

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக்.9 - அரியானா மாநிலம் ஹிஸார் மக்களவை தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று அன்னா ஹசாரே பிரச்சாரம் செய்யும் சி.டி வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஊழலுக்கு எதிராக ஜனலோக்பால் சட்டம் இயற்ற வேண்டுமென ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் அரியானா மாநிலம் ஹிஸார் மக்களவை தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற ஹசாரேவின் பிரச்சார சி.டி. வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலின் போது ஹசாரே நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 நிமிடம் ஓடக் கூடிய இந்த சி.டிக்கு ஊழல்வாதிகளின் அரசு என்று பெயரிடப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக எங்கெல்லாம் இயக்கங்கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் புகழுக்கு ஆசைப்படாமல் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அண்மையில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து ஹசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ். பின்துணை உண்டு என்று காங்கிரஸ் கூறி வருவது மெய்யாகி உள்ளது என்று அக்கட்சித் தலைவர் திக்விஜயசிங் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் தன்னை எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டரும் சந்திக்கவோ, தனக்கு ஆதரவு தெரிவிக்கவோ இல்லை என்று ஹசாரே மறுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago