முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்கெய்ல் - கோக்லி வெற்றியை பறித்துவிட்டனர்: காடிச்

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், அக். 9 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோக்லி இருவரும் அதிரடியாக ஆடி, எங்களது வெற்றியைப் பறித்து விட்டனர் என்று நியூசெளத் வேல்ஸ் அணியின் கேப்டனான காடிச் தெரிவித்து இருக்கிறார். சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் நடந் த முதல் அரை இறுதி ஆட்டத்தில், நியூசெளத் வேல்ஸ் அணியை வீழ்த் தி பெங்களூர் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

பெங்களூர் சின்னசாமி அரங்கத்தில் நேற்று முன் தினம் நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசெளத் வேல்ஸ் அணி முதலில் பேட்டி ங் செய்தது. வார்னரின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவரி ல் 2 விக்கெட் இழப்புக்கு 203 ரன்னைக் குவித்தது. 

வார்னர் 68 பந்தில் 123 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 11 சிக்சரும் அடங்கும். டேனியல் ஸ்மித் 42 பந்தில் 62 ரன் எடு த்தார். 

ஒரு ஓவருக்கு 10.20 ரன் தேவை என்ற கடினமான இலக்குடன் பின்னர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பேட்டிங் செய்தது. கிறிஸ் கெய்ல், விராட் கோக்லியின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூர் அணி 9 பந்து மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 6 விக்கெட் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. 

கிறிஸ் கெய்ல் 41 பந்தில் 8 பவுண்டரி, 8 சிக்சருடன் 92 ரன் எடுத்தார். விராட் கோக்லி 49 பந்தில் 84 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 10 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும். 

இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் வெட்டோரி கூறியதாவது - ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இருந்த து. 200 ரன் இலக்கு எடுக்கக் கூடியதாகும். பந்து வீச்சாளர்களின் பணி மிகவும் கடினமானது. 

ரசிகர்கள் மகிழும் வகையில் ஆட்டம் இருந்தது. கிறிஸ் கெய்லும், விராட் கோக்லியும் நம்பிக்கை அளிக்கும் வகையில், அதிரடியாக விளையாடினார்கள். அவர்களது ஆட்டம் பாராட்டும் வகையில் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்தத் தோல்வியால் நியூசெளத் வேல்ஸ் கேப்டன் சைமன் காடிச் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவ து - விராட் கோக்லியும், கெய்லும் அதிரடியாக விளையாடி எங்களது வெற்றியை பறித்து விட்டனர். 

இருவரது ஆட்டம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இருவரது அதிரடியான ஆட்டத்தால் இளம் பெளலர்கள் பாடம் கற்று இருப்பார் கள். சில கேட்சுகளை தவறவிட்டதும் எங்களது தோல்விக்கு காரண மாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

ஆட்டநாயகன் விருது பெற்ற கோக்லி கூறியதாவது - எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் மீண்டும் சிறப்பாக அமைந்தது. கெய்லின் அதிரடி யான ஆட்டம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. 

ஒரு ஓவருக்கு 25 ரன் எடுக்கக் கூடிய திறமை மிக்கவர். வேல்ஸ் அணிக்கு எதிரான இந்த அரை இறுதி போட்டியில் எனது ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது உற்சாகத் தை அளித்துள்ளது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்