முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி அன்சாரி இன்று துருக்கி பயணம்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். - 10 - துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி 6 நாள் பயணமாக துருக்கி செல்கிறார்.  இப்பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் சமூக நல்வாழ்வு துறை அமைச்சர் முகுல் வாஷ்னிக், இடது கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் எச்சூரி மற்றும் எம்.பிக்கள் ரஞ்சித்சிங், விஜய்சிங் பாட்டீல், விஜய்பால்சிங், இன்கிரிட் மெக்லியோ மற்றும் தொழிலதிபர்களும் செல்கின்றனர். ஹிஸ்தான்புல் நகரில் நடைபெறும் தொழிலதிபர்களுக்கான கூட்டத்தில் அன்சாரி கலந்து கொள்கிறார். இப்பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொழில்நுட்பம், கட்டமைப்பு வசதிகள், பொறியியல் துறை போன்ற வர்த்தக பரிமாற்றங்கள் இடம் பெறும் என்று வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது. 2003 ம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் இந்திய பிரதிநிதிகள் துருக்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்