முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் அபகரிப்பில் கருணாநிதி கைதேர்ந்தவர் ஜெயலலிதா

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி,அக்.- 10 - நில அபகரிப்பு செய்வதில் கருணாநிதி மிகவும் கைதேர்ந்தவர் என்று திருச்சி பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குற்றஞ்சாட்டி பேசினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாநேற்று திருச்சியில்  தமது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் முதல் இடமான பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெரியார் சிலையில் இருந்து அ.தி.மு.க. வேட்பாளர்  மு. பரஞ்ஜோதி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடம் அ.தி.மு.க. வேட்பாளர்களை  ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
  ஐந்து மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்ற போது உங்களிடையே வாக்கு கேட்டு வந்தேன்.  என்னுடைய வேண்டுகோளினை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அமோக வெற்றியைத் தந்தீர்கள்.  உங்களின் அமோக ஆதரவுடன் நானும் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டேன்.  தமிழகத்தில் புரட்சித் தலைவர் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அன்புச் சகோதரர்  மரியம் பிச்சையையும் வெற்றி பெறச் செய்தீர்கள். அதனைத் தொடர்ந்து, அவர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில நாட்களிலேயே  மரியம் பிச்சை  துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் மரணமடைந்ததால் தற்போது இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.  இந்தத் தேர்தலில் கழக வேட்பாளர் மு. பரஞ்ஜோதிக்கு வாக்கு கேட்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். நான்  ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கே மாதங்களில், விலையில்லா அரிசி; முதியோர் உதவித் தொகை உயர்வு; 25,000 ரூபாய் திருமண உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்திருப்பின் 50,000/​ ரூபாய் என உயர்த்தப்பட்ட உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம்; மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்வு; குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு; தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி; பிளஸ் 1, 2 மற்றும் கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு மடிக் கணினி; ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம்; விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; இடை நிற்றலை குறைக்கும் பொருட்டு 10 முதல் 12​ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை; வளமான பிரிவினரை நீnullக்கம் செய்யாமல், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைபிடிக்க ஆணை என,    பல்வேறு   மக்கள் நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றி இருக்கிறது.  அவற்றின் பயனை வாக்காளப் பெருமக்களாகிய நீnullங்கள் அடைந்து இருக்கிறீர்கள். உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எங்களின் லட்சியம்.  உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக எனது அரசு தொடர்ந்து செயல்படும்.   முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழகமும் தி.மு.க​வினரால் சூறையாடப்பட்டது. தமிழகத்தின் சட்டம்​ஒழுங்கு, சீரழிந்து இருந்தது. இதனைச் செப்பனிட்டு அமளிக் காடாக விளங்கிய தமிழகத்தை நான்கே மாதங்களில் அமைதிப் nullங்காவாக மாற்றி உள்ளேன்.  மின்சாரத்தைப் பொறுத்தவரையில் எங்களது அரசின் துரித நடவடிக்கை காரணமாக, மின் வெட்டு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் தமிழ்நாட்டை மின்வெட்டே இல்லாத மாநிலமாக ஆக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எடுத்து வருகிறேன்.   இந்த இடைத் தேர்தலில், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மு.சூ. நேரு போட்டியிடுகிறார்.  இவர் பெயர் தான் நேரு.  ஆனால், அந்தப் பெயருக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர். நேர்மாறான வழியில் செயல்படக் கூடியவர்.  இதை நான் சொல்லி nullநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அவருடைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீnullங்கள். நேருவின் நேர்மையற்ற செயல்பாட்டினை நன்கு உணர்ந்தவர்கள் nullநீங்கள்.  முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு உங்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மாறாக, உங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பினாமிகள் பெயரில் வாங்கிக் குவித்தவர் தான் இந்த நேரு. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பொதுமக்கள் மட்டுமல்லாமல், தி.மு.க​வின் தீவிர அனுதாபிகளே இவர் மீது நில அபகரிப்பு புகார்களை அளித்துள்ளனர்.  நேருவைச் சொல்லி எந்தப் பயனும் இல்லை. அவர் வந்த வழி அப்படி. தன் தலைவர் கருணாநிதியின் வழியை பின்பற்றி இருக்கிறார் நேரு. இந்தத் தருணத்தில் தி.மு.க. தலைமையகம் அமைந்துள்ள இடத்தை கருணாநிதி எப்படி அபகரித்தார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தி.மு.க. தலைமையகம் சென்னை அண்ணா சாலையில் சுமார் நான்கரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.  இந்த இடம் பெண்ணலூர்பேட்டை ஜமீனுக்கு சொந்தமான இடம். 1972- ஆம் ஆண்டு இந்த இடத்திற்கு சொத்து வரி கட்ட வேண்டும் என்றும்; நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கூடுதல் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, ஜமீன்தாரின் இளைய மகன் ஞ. சுப்புரத்தினம் நாயுடு சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இந்த இடத்தை தி.மு.க​விற்கு கொடுத்துவிடும்படியும்; இல்லையெனில் எந்தவித இழப்பீடும் இன்றி நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் மேற்படி இடம் கையகப்படுத்தப்படும் என்றும் மிரட்டப்பட்டார்.  இதனால் வேறு வழியின்றி அந்த இடம், தி.மு.க. அறக்கட்டளையின் பேரில் 1972​ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் மேற்படி இடத்திற்கு விதி விலக்கும் அளிக்கப்பட்டது.  இந்தப் பத்திரத்தில் ஜமீன்தாரின் குடும்பத்தினர் பலர் கையெழுத்து இடவில்லை. ஜமீன் குடும்பத்தில் உள்ள பத்து பேருக்கு பதிலாக சுப்புரத்தினம் நாயுடு மட்டும் கையொப்பம் இட்டு இருக்கிறார். ஆனால், இந்த இடத்திற்கான பத்திரத்தில் சுப்புரத்தினம் நாயுடு பெயர் இல்லை என்பதும்; இதை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை நான் சொல்லவில்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆக, அந்தக் காலத்திலேயே நில அபகரிப்பில் கைதேர்ந்தவர் கருணாநிதி என்பதை நீnullங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதே போன்று, திருச்சியில் உள்ள தி.மு.க. அலுவலகமும், வக்ஃப் வாரிய நிலத்தை அபகரித்துக் கட்டப்பட்டது தான். தி.மு.க​வினரின் நில அபகரிப்புகளை உணர்ந்த நான், ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் சொத்துக்கள் மீட்டுத் தரப்படும் என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்து இருந்தேன். இதனை நிறைவேற்றும் பொருட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழகம் முழுவதும் நிலம் மற்றும் சொத்து அபகரிப்பு வழக்குகளை திறம்பட கவனிக்கும் வகையில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென 25 சிறப்பு nullதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்று வரை, 17,431 நில அபகரிப்பு புகார்கள் பெறப்பட்டு உள்ளன. 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றுள் 28 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 755 நில ஆக்கிரமிப்பாளர்கள் கைது  செய்யப்பட்டு 624.66 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழகம் சுபிட்சமான பாதையை நோக்கி பீடுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  மு. பரஞ்ஜோதி போட்டியிடுகிறார். இவர் உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர். உங்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தருபவராக; உங்கள் குறைகளை நிவர்த்தி செய்பவராக; உங்களில் ஒருவராக செயல்படுவார் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். நான்கு மாதங்களில் நாடே போற்றும் வண்ணம் நாங்கள் நிறைவேற்றி இருக்கின்ற திட்டங்களை கருத்தில் கொண்டும்; தி.மு.க. வேட்பாளர் நேருவின் அராஜகங்களை, நில அபகரிப்புகளை, அட்டூழியங்களை, மனதில் வைத்தும்; திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், கழக வேட்பாளர் மு. பரஞ்ஜோதிக்கு இதய தெய்வம் புரட்சித் தலைவர் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்; நேருவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் இந்த மாதம் 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெற உள்ளன. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், அத்தியாவசியப் பணிகளையும் மேற்கொள்வதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகிப்பதால் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைத்திட; அரசின் நலத் திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய; திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் அன்புச் சகோதரி ஜெயாவுக்கும்; மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும்;  பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து,கழகத்தை சேர்ந்த அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.   சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுச் சாதனையைப் போல், இந்த உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களிலும் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து; மேலும் ஒரு திருப்பு முனையை உருவாக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். அதை நிச்சயம் nullநீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையினை தெரிவித்து; உங்களுக்காக உழைக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இந்த பிரசாரத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார், முகமது ஜான்,சுப்பிரமணி,செல்லப்பாண்டியன்,என்.ஆர்.சிவபதி,கோகுல இந்திரா, பி.வி.ரமணா,வி.செந்தில் பாலாஜி மற்றும் தமிழ் மகன் உசேன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன், கே.கே.பாலசுப்பிரமணியம்,வைகை செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சரோஜா, ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், குமரி எஸ்.கோலப்பன், இளைஞர் பாசறை மாநில செயலாலர் செந்தில்நாதன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் எம்.ஜி.ஆர். நம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா சென்ற வழியில் பல இடங்களில் அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொண்டர்கள் ஜெண்டை மேளம் முழுங்க ஆடிப்பாடி வரவேற்றனர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்