முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானப் படைக்கு நவீன விமானங்கள்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

ஹிண்டன், அக். - 10 - பல கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விமானப் படைக்கு போர் விமானங்களை வாங்குவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக விமானப் படை தளபதி ஏர் மார்ஷல் எஸ்.ஏ.கே. பிரவுனி தெரிவித்துள்ளார்.  இந்திய விமான படை தினத்தையொட்டி நடைபெற்ற அணி வகுப்பில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, பல பயன்பாடுகளை கொண்ட நடுத்தர போர் விமானங்களை விமான படையில் சேர்க்கவுள்ளோம். இதற்கு பாதுகாப்பு துறை கடந்த வாரம் அனுமதி அளித்துள்ளது. புதிய விமானங்களை வாங்க விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து விலை புள்ளிகள் பெறப்பட்டுள்ளன. அவற்றை ஓரிரு நாட்களில் திறந்து முடிவெடுக்க உள்ளோம்.  இதில் குறைவான விலையை குறிப்பிட்டுள்ள நிறுவனத்துக்கு விமானங்களை வாங்க ஒப்பந்தம் அளிக்கப்படும். விமான படையை நவீனப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. டி 130 ஹெர்குலிஸ் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. அமெரிக்க தயாரிப்பான இவை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக விமான விபத்து தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு வருவதாக பிரவுனி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்