முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் ஜெயலலிதா முன்னிலையில் தி.மு.க.-காங்கிரசார் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி,அக்.- 10 - திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க. வில் இணைந்தனர். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக அவர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து பஸ்நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை வந்தார். அப்போது சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பெரியார் சிலையில் இருந்து பிரசாரத்தை ஜெயலலிதா தொடங்கினார். பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு அவரது முன்னிலையில் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த தி.மு.க., மற்றும் காங்கிரஸ், இதர கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வுடன் இணைத்துக்கொண்டனர். தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ்,சந்திரமோகன் உள்ளிட்ட தி.மு.க.வினர்கள் அந்த கட்சியில் இருந்து வெறுப்புடன் விலகி அ.தி.மு.க.வில் தங்களை மனப்பூர்வமாக இணைத்துக்கொண்டனர். கடந்த பல தினங்களுக்கு முன்பு சேலம் மேற்கு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆர்.ஆர். சேகர், அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். மேலும் அவரது ஏற்பாட்டின்பேரில் இந்த 3 ஆயிரம் பேரும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். அத்துடன் மதுரை திருநகர் பகுதி தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மனோகர், அப்பன்ராஜ், செந்தில்குமார் உள்பட பலர் அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வுடன் இணைத்துக்கொண்டனர். இப்படி தமிழகம் முழுவதும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளில் இருந்து ஏராளமானோர் விலகி அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்