முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகுஜன்சமாஜ் கட்சியிலிருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,அக்.- 10 - பகுஜன்சமாஜ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரை சேர்த்து கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ஹஸ்தினாபூர்,மீரட் ஆகிய தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் யோகேஷ் வர்மா. இவர் பல கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பகுஜன்சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரை சேர்த்து கடந்த 2 மாதங்களில் பகுஜன்சமாஜ் கட்சியில் இருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி லட்சுமி, ஜியநேத்ரா பன்சால் தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை வழக்கில் யோகேஷ் வர்மா மற்றும் அவரது உதவியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையொட்டி யோகேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று கட்சியின் மாநில தலைவர் சுவாமி பிரசாத் மெளரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் பன்சாலின் சொத்துக்களை அபகரிக்க வர்மா முயன்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட தம்பதிகளின் மகன் நிகுஞ்ஜ், காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னையும் படுகொலை செய்ய வர்மா முயன்றதாக நிகுஞ்ஜ் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து வர்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பகுஜன்சமாஜ் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்கள் மீது முரண்பட்ட தகவலை கொடுத்துள்ளார். இதனையொட்டி வர்மா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று மெளரியா அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்