முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதூர்,கற்பகநகர், கே.கே.நகர் பகுதிகளில் ராஜன்செல்லப்பா தீவிர பிரச்சாரம்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,அக்.- 10 - மதுரை புதூர்,கற்பகநகர், கே.கே.நகர், அண்ணாநகர் பகுதிகளில் அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, கவுன்சில் வேட்பாளர்களுடன் நேற்று தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தார்.    மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா நேற்று காலை புதூர் பஸ்நிலையத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரத்தை மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அழகர் கோவில் சாலை, லூர்துநகர், மாதா கோவில் தெரு, புதூர் ஐய்யப்பன் கோவில், கற்பகநகர், சம்பக்குளம், உத்தங்குடி ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வீதி,வீதியாக பிரச்சாரம் செய்தார். அவருடன்45வது வார்டு அதிமுக வேட்பாளர் புதூர் அபுதாகீர், 46வது வார்டு வேட்பாளர்  அமுதா கண்ணன், 27வது வார்டு ஆதிலட்சுமி கண்ணன் ஆகியோரும் சென்றனர்.பின்னர் மாலையில் கே.கே.நகர் ஆர்ச் எம்ஜிஆர் சிலை முன்பிருந்து பிரச்சாரத்தை துவக்கிய ராஜன்செல்லப்பா வண்டியூர் பூங்கா, மானகிரி, அண்ணாநகர், அண்ணாபஸ்நிலையம், முதலியார் காலனி ஆகிய இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார். அவருடன் 44வது வார்டு அதிமுக வேட்பாளர் எம்.ராஜலட்சுமி, 33 வது வார்டு அதிமுக வேட்பாளர் எம்.என்.முருகன், 34வது வார்டு அதிமுக வேட்பாளர் ராணி போஸ் ஆகியோரும் சென்று இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தனர்.    இந்த பிரச்சாரத்தின் போது, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம், முன்னாள் எம்பி எஸ்.முத்துமணி, அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், வடக்கு தொகுதி இணை செயலாளர் ஏ.பி.பாலசுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் அண்ணாநகர் முனியசாமி, வில்லாபுரம் செல்வம்,ஏ புதூர் சுந்தரா, இளங்கோவன், அழகர் நகர் பா.விஜி, சம்பக்குளம் துரைப்பாண்டி, வழக்கறிஞர் பட்டுக்கோட்டை ராஜராஜன், புதூர் மோகன், மார்க்கெட் முத்துராமலிங்கம், மகளிரணி கவுசல்யா, ஜெயபாக்கியம், ஆர்.ஜோதி, எம்.கல்யாணி, பி.புஷ்பா, சுகுணா, பேச்சியம்மாள், வைகை மூர்த்தி, வக்கீல் அசோகன், வினுவர்த்தன், வட்ட செயலாளர்கள் ஏ.முத்துச்சாமி, எஸ்.போஸ், மானகிரி மூர்த்தி, கே.கே.நகர் மணி, வக்கீல் மகேசுவரன், வீரணன், பி.பாண்டி, மகாதேவன், ஆவின் பழனிச்சாமி, கண்ணாமூர்த்தி, ஏ.நாகராஜன், ஐபிஎஸ் பாலமுருகன்ஸ எம்.ஜி.பாண்டி, நிலையூர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago