முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மையான-சுகாதாரமான மாநகராட்சியை அளிப்பேன்- சதை துரைசாமி

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 10 - சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் சைதை துரைசாமி வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். சென்னை மாநகராட்சி அ.தி.மு.க மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி நேற்று காலை சைதாபேட்டை தொகுதி பகுதிகள்  முழுவதும் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் , வாக்கு சேகரிப்பு பணியை தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் செந்தமிழன் துவக்கி வைத்தார் . பிரச்சாரம் நடைபெற்ற  இடங்கள் ,கோட்டூர் , கோட்டூர்புரம்   , கானல் சாலை, பள்ளிப்பட்டு , ஸ்ரீராம் நகர், எல்லையம்மன் கோவில் தெரு , ஏரிக்கரை சாலை, மத்திய தோல் பதனிடு மையம் , களிகுன்றம், வேளச்சேரி மெயின் ரோடு, சின்னமலை , எல்.டி சாலை,  ஆரோக்கிய மாத கோவில் தெரு , வேங்கட்டபுரம் , சின்னமலை , தாடண்ட நகர் , அரசு பண்ணை, ஆற்றுமா நகர் , கன்னிகா புரம் , காமராஜ புரம் ,  நேரு நகர், மடுவங்கரை , ஐந்து பல்லாங்கு சாலை , சாத்தானி கோவில் தெரு , மேட்டுபாளையம் இணைப்பு சாலை , போன்ற பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது , வழி நெடுக பொதுமக்கள் ஆராத்தி எடுத்தும் , nullக்களை தூவியும் வரவேற்றனர் , இன்று விடுமுறை நாள் என்பதால் அரசு குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகைதந்து வரவேற்றனர் , இளைஞர்கள் , பட்டதாரிகள் , மகளிர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து பொதுமக்களிடம் ஆரதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர் ,
தனது பிரச்சாரத்தில் சைதை துரைசாமி பேசியதாவது:- சைதாப்பேட்டை தொகுதி என்னை அரசியலில் நுழைய வைத்த தொகுதியாகும் ,  இந்த தொகுதிமக்களுக்கும்  எனக்கும் nullநீண்ட நாள் தொடர்பு உள்ளது . இப்பகுதி மக்களுக்கு நான் பல வழிகளில் பல உதவிகள் , மக்கள் நலப்பணிகள் செய்துவருகிறேன். எனது சொந்த தொகுதில் நான் எனக்காக வாக்கு சேகரிக்கும் போது மிகவும் மனம் மகிழ்ச்சி  அடைகிறேன் , எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . முதல்வர் ஜெயலலிதாஅனைத்து  தரப்பு மக்களும் பயன் படும் வகையில் பணியாற்றி வருகிறார் . தமிழர்களையும் , தமிழ் மக்களையும் பெருமைகளை உலக மக்களுக்கு எடுத்து கூறியவர் முதல்வர் ஜெயலலிதா.  தமிழக அரசின் செயல்பாடுகளை பார்த்து வியந்த அமெரிக்காவின் வெளி உறவுத்துறை  அமைச்சர் ஹிலாரி கிளிண்டனே நேரடியாக வருகை தந்து பாராட்டி சென்றுள்ளதை உலகமே வியக்கிறது . இப்படிப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் சென்னை மாநகராட்சி செயல் படும் போது சென்னையின்  புகழை முதல்வர் ஜெயலலிதா உலகமே வியக்கும் வகையில் அனைத்து  வசதிகளையும் மேம்படுத்தி சென்னைக்கு  பெருமை தேடிதருவார் . ஆகவே சென்னை வாழ் மக்கள் அனைவரும் மேயர் வேட்பாளராகிய எனக்கும் , வார்டு உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு அளித்து வெற்றிபெற வைக்க முன் வரவேண்டும் .
சென்னையில் பல அரசு குடியிருப்புகள் , வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க அரசும் , தி.மு.க மாநகராட்சியும் போட்டி போட்டுக்கொண்டு சீரழித்து சின்னாபின்னமாக வைத்துள்ளது, பல குடியிருப்புகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை கூட செய்து கொடடுக்க வில்லை . தி.மு.க கவுன்சிலர்கள் மக்கள் நல பணிகளில் ஈடுபடாமல் கட்டபஞ்சாயத்து தலைவர்களை போல் செயல் பட்டு வந்துள்ளனர்.இதற்கு தி.மு.க வும் அரசும், மேயரும் துணை போயுள்ளனர் என்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது . இந்த நிலை மாற வேண்டும் என பொதுமக்களும் , நடுநிலையாளர்களும் விரும்புகின்றனர் , மாநிலத்திலும் மாநகராட்சியிலும் ஒரே அரசாக இருக்கும் போதுதான் நல்ல வளர்ச்சி திட்டம் நடைபெற்று மக்கள் நல பணிகள் நடைபெறும் . என்னை மாநகர மேயராக தேர்தெடுத்தால்  தூய்மையான , சுகாதாரமான , நேர்மையான , மாநகராட்சியை அம்மாவில் ஆலோசானை  படியும் உதவியுடன் செய்து கொடுப்பேன் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்