முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறன் சகோதரர்கள் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு எதிரொலி சன் டி.வி. பங்குகள் விலை சரிந்தது

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

மும்பை, அக்.- 11- மாறன் சகோதரர்களின் வீடுகளில்  சி.பி. ஐ. ரெய்டு  நடத்தியதன் எதிரொலியாக மும்பை  பங்குச் சந்தையில் சன் டி.வி. நிறுவனத்தின் பங்குகள்  நேற்று ஆரம்ப நிலையில்  சரிவு  ஏற்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்  அவரது சகோதரர் கலாநிதி  மாறன் ஆகியோருக்கு  சொந்தமான சன் டி.வி. நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பெயர்களில்  டி.வி. ஒளிபரப்புக்களை நடத்தி வருகிறது.  மத்திய  தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது  தயாநிதி மாறன் தனது வீட்டிற்காக  வாங்கிய 300 க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புக்களை சட்ட விரோதமாக சன் டி.வி. அலுவலகத்திற்கு மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து விசாரணை நடத்தி வரும்  சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சென்னையில் உள்ள மாறன்  சகோதரர்களுக்கு  சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் எதிரொலியாக நேற்று மும்பை பங்குச் சந்தையில் சன்.டி.வி. நிறுவனத்தின் பங்குகள் ஆரம்ப நிலையில் 16 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மும்பை பங்கு சந்தையில் நேற்று காலை சன் டி.வி.யின் பங்கு ரூ. 251 .50 என்ற விலையில் விற்க தொடங்கியது.  அதன் பிறகு இது  மேலும் குறைந்து ரூ. 235.05  ஆக விற்பனை ஆனது.  அதாவது 10.09 சதவீதம்  குறைந்துள்ளது.  இதே போல தேசிய பங்கு சந்தையான நிப்டியிலும் சன் டி.வி.யின் பங்குகள் சரிவை சந்தித்தன. நிப்டியில்  ரூ. 254.40 ஆக இருந்த சன் டி.வி.யின் பங்கு விலை  நேற்று ரூ. 221.20 ஆக  வீழ்ச்சி அடைந்துள்ளது. இது  15.86 சதவீத வீழ்ச்சி  ஆகும்.  அதாவது கிட்டத்தட்ட 16 சதவீதம் விலை சரிந்துள்ளது. ஆனால் இந்த பங்குகள் நேற்று பிற்பகலுக்கு மேல் ஏற்றத்தை சந்தித்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்