முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வில் ஆள் மாறாட்டம்:குற்றவாளியை காப்பாற்றுவது தவறு -அன்பழகன்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, அக்.- 11 - இந்திரா நகர் தொகுதி தர்மாபுரி வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர் சுத்துக்கேணி பாஸ்கரனுக்கு ஆதரவாக அன்பழகன் எம்.எல்.ஏ. ஓட்டு வேட்டை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:- ஆள் மாறாட்டம், கூட்டு சதி செய்த தனது அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் தனது கடமையை செய்யாமல் பழியை அ.தி.மு.க. மீது போடுவது முதல்வர் பதவிக்கே களங்கம் ஆகும். ஆள் மாறாட்டம் செய்தது கல்வி அமைச்சர். தேர்வு எழுத திண்டிவனத்தில் விலாசம் கொடுத்தது கல்வி அமைச்சர். அமைச்சருக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்தது கல்வி அமைச்சர்.  இவ்வளவு நற்காரியங்களையும் செய்து விட்டு ஆள் மாறாட்டத்தில் பிடிபட்ட பிறகு, இதற்கு காரணம் அ.தி.மு.க.வின் அரசியல் காரணம் தான் என்று முதல்வர் கூறியிருப்பது குற்றச்செயலை திசை திருப்பி குற்றவாளியை காப்பாற்றும் செயலாகும்.  முதல்வர் ரங்கசாமி முதல்வர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு தனது கடமையை செய்யாமல் பொறுப்பற்ற முறையில் பிறர் மீது திசை திருப்பும் பணியை செய்வது அழகல்ல.  கல்வி அமைச்சரால் சட்டசபையின் புனிதம், மாண்புகள் சீர்குலைந்ததோடு, அமைச்சரை காப்பாற்ற சட்டவிரோத செயல்கள் ஆளும் கட்சியால் சட்டசபை வளாகத்திற்குள் அரங்கேற்றப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஒரு அமைச்சரை சட்டசபைக்குள்ளேயே கைது செய்து விடுவார்கள் என்று பயந்து சட்டமன்ற வளாகத்தின் முன் வாசல், பின்வாசல் என்று 3 கேட்டுகளையும் பூட்ட வேண்டிய அவசியம் என்ன?அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் பணி செய்ய சட்டசபைக்கு சபாநாயகரும், அரசு கொறடாவும் இருக்கும் போதே சட்டமன்ற வளாகத்துக்கு பூட்டு போட்டது எவ்வளவு பண்புள்ள உயர்ந்த காரியம்? சட்டசபை வளாகத்தை பூட்ட உத்தரவிட்டது யார்? என்று கவர்னர் விசாரணை நடத்த வேண்டும். நமது ராஜ்யசபா எம்.பி. கண்ணனிடம் கேட்டாலே தப்பிற்கும், தவறுக்கும் அழகழகா பல்வேறு வித்தியாசமான காரணங்களை கூறுவார். இதில் இருந்து கல்வி அமைச்சரை காப்பாற்ற வழியை முதல்வர் கேட்கலாம். ஏனென்றால் அவர் காங்கிரஸ் காரர் என்று கூறுகிறார். முதல்வரும் காங்கிரஸ் காரர்தான் என்றால் காங்கிரஸ் கட்சியில் உள்ள கண்ணன் யாருக்கு ஓட்டு போட்டார்? காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட்டாரா? ரங்கசாமியும் காங்கிரஸ் தான் என்று கூறுவதால் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு போட்டாரா? ஒன்றுமே புரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.  இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் செம்மலை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெரியசாமி, புருசோத்தமன், ஓம்சக்தி சேகர், பாஸ்கர், அவைத்தலைவர் பாண்டுரங்கன், மாநில இணை செயலாளர் காசிநாதன், துணை செயலாளர் பன்னீர்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் பிரகாஷ், மாணவர் அணி செயலாளர் ஏழுமலை, தலைவர் விசிசி நாகராஜன், துணை செயலாளர் சீனிவாச பெருமாள், தொகுதி செயலாளர்கள் நாராயணன், மணி, சேகர், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் நடேசன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணை செயலாளர் மருதமலையப்பன், தொகுதி இணை செயலாளர் வடிவேல், தம்பா என்ற சிதம்பரம், மைக்கேல், வேலு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்