முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி இடைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை 20-ந்தேதி -தேர்தல் ஆணையம்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.- 11 - திருச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 20-ந்தேதி நடை பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு. நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் மரியம் பிச்சை கார்விபத்தில் மரணமடைந்த தால் அங்கு வரும் 13-ந்தேதி இடைத் தேர்தல் நடை பெறும் என்று இந்தியதலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து எல்லா அரசியல் கட்சிகளுக்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுக் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளராக பரஞ்ஜோதியை அறிவித்தார். அ.தி.மு.க. தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் என்று அறிவித்தபிறகு அனைத்து கட்சிகளும். தனியே நிற்பதாக அறிவித்தது. தி.மு.க. தனது வேட்பாளராக நிலமோசடி புகாரில் கைது செய்யப்பட்ட நேருவை நிறுத்தியுள்ளது இது தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் திருச்சி மேற்கு இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு ஆதரவுதிரட்டினார். இன்று (11-ந்தேதி) தி.மு.க. தலைவர் கருணாநிதி வேட்பாளர் நேருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். 13-ந்தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று மாலை 5மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. ஏற்கனவே வாக்கு எண்ணிக்கை வரும் 17-ந்தேதி நடை பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் வரும் 17-ந்தேதி மற்றும் 19-ந்தேதி இரு தினங்கள் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவுநடை பெறஉள்ளதால், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றும் படி அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன. இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றியுள்ளது. திருச்சி மேற்கு சட்டபேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கை தேதியை வரும் 17-ந்தேதிக்கு பதிலாக 20-ந்தேதியன்று நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்