முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. பெரிய சக்தியாக வர முடியாது- பொன்ராதா கிருஷ்ணன் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,அக்.- 11 - தமிழகத்தில் தேமுதிக பெரிய சக்தியாக வர முடியாது என்று பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் மதுரையில் தெரிவித்தார்.   பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்மாநில தலைவர் பொன்ராதா கிருஷ்ணன் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பல பகுதிகளில் பிரதிநிதித்துவம் பெறுவோம். அன்று ஆளும் கட்சியாக இருந்த திமுக செய்த அராஜக செயல்களால் இன்று ஆட்சி செய்யும் தகுதியை இழந்தது. உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், ஓட்டு எண்ணிக்கை நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கூறியது. ஆனால் அதிமுக, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இப்போது உள்ளாட்சி தேர்தலில் பல கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. பாரதீய ஜனதா அன்றும் இன்றும் சுய பலத்தில் மக்கள் நம்பிக்கை வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.   தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய பெரிய கட்சிகள் என்று இளங்கோவன் கூறியிருந்தார். இது உண்மைதானா என்று தேர்தலுக்கு பிறகு தெரிந்து விடும். தேமுதிக மிகப்பெரிய சக்தியாக வர முடியாது. பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் தனித்தன்மையை இழந்து விட்டது. கூட்டணி சேர மாட்டோம் என்று கூறி வந்த தேமுதிக கட்சி காணாமல் போய் விடும் என்ற அச்சம் காரணமாக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தார். இன்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தப்பிக்க முயலுகிறார் என்றார். பேட்டியின் போது மாநில செயலாளர் சுரேந்திரன், மாவட்ட செயலாளர் ராஜரத்தினம், மேயர் வேட்பாளர் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்