முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட தேர்தல் ஆய்வுக்கூட்டம் தேர்தல்அதிகாரி, கலெக்டர்பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,அக்.- 12 - மதுரை மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்  மாவட்ட தேர்தல்  அலுவலரும், மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் நடைபெற்றது.  உண்மையான ஜனநாயகம் மிளரவேண்மானால் நேர்மையான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நேர்மைக்கு புறம்பானவர்களை தேர்ந்தெடுக்க இடம் கொடுத்திட கூடாது. மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டவாறு தேவையெனில் சட்டமன்ற தேர்தலைப் போலவும் அதற்கும் மேலாக உள்ளாட்சித்தேர்தலை நடத்திட வேண்டும்.  இரவு நேரங்களில் நடக்கும் சம்பவங்களை தடுக்க பகல் நேரங்களில் தேர்தல் அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள் 110 குற்றவியல் சட்டத்தின் கீழும், 109 சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரங்களை நாள்தோறும் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். எந்த அலுவலர்களும் தேர்தல் முடியும் வரை விடுப்பு எடுக்க கூடாது. அதற்கு துறை அலுவலர்கள் அனுமதிக்க கூடாது.  யார் யார் வேட்பாளராக போட்டியிடுகிறார்களோ அவர்களுடைய விபரம், சொத்துக்கணக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும் இணையதளத்தில் போடவேண்டும். வாக்குச் சீட்டு முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் திடீர் தணிக்கை செய்யவேண்டும். அதே போன்று அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். வாக்குச் சாவடிகளில் அனைத்து வசதிகளும் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும், சிறப்பு தனி வரிசை அமைக்கவேண்டும்.  இவற்றையெல்லாம் கண்காணிக்க கூடுதலாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அனைத்து விதிகளையும் முறையாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடித்து சுதந்திரமாகவும், ஜனநாயக முறைப்படி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் சகாயம் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.முருகேஷ், மதுரை மாநகராட்சியின் துணை ஆணையர் தர்ப்பகராஜ், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை எம்.பிரபாகரன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் குருமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலி அக்பர், மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வரலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்