முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல்வியாபாரி, நிலஅபகரிப்பு நாயகனாகமாறிய கே.என்.நேருவின் முறைகேடுகள்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

திருச்சி, அக்.- 11 - பிரபல மிளகாய் வியாபாரி அரசியலுக்குள் நுழைந்து மூன்று முறை தமிழக அமைச்சராகியும் தற்போது பல கோடி ரூபாய் அரசு பணத்தை சுருட்டியும் அதேபோல பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரிப்பு செய்தக்கதை தெரியுமா? மாக்களே, அவர்தான் நம்மூர் அரசியல் வியாபாரி கே.என்.நேரு. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா காணக்கிளியநல்லூர் என்ற பசுமையான கிராத்தை சேர்ந்தவர்தான் இந்த அரசியல் வியாபாரி கே.என்.நேரு. ஆரம்பத்தில் விவசாய வேலைகளை செய்து வந்து இவர் தன்னுடைய நிலத்தில் மிளகாய் தானியத்தை பயிரிருட்டு வளர்த்து அதை மூட்டை மூட்டையாக கட்டிக்கெ”ண்டு புல்லட் மோட்டர் சைக்கிளில் திருச்சி காந்தி மார்கெட்டுக்கு கொண்டு வந்து மிளகாயை காசாக்கிதனது விவசாய பணிகளை ஆரம்ப காலத்தில் செய்து வந்தார்.  அதன்பிறகு மெல்ல மெல்ல முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் எடுபிடியாக தனது அரசியல் வாழ்க்கையை துவக்கிய நேரு அவரது காலை பிடித்து லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு திமுக சார்பில் முன்முறையாக உள்ளாட்சி தேர்தலில் குதித்தார். அந்த சமயத்தில் ஒரு கேள்வி எழுந்தது. அதாவது கே.என்.நேரு என்ற பெயர் காங்கிரஸ் தலைவர்களில் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மறைந்த பிரதமர் ஜவர்கர்லால் நேரு க”ங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவர். அவரது பெயரை வைத்துக்கொண்ட கே.என்.நேரு எப்படி திமுக சார்பில் போட்டியிடுகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. கடைசியில்  கே.என்.நேருவின் தந்தை நாராயணசாமி ரெட்டியார் க”ங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவர் என்பதால் தனது மகனுக்கு நேரு என்று பெயர் சூட்டினார்.

இந்த நிலையில் முதன்முதலில் போட்டியிட்ட ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவர் பதவியை பிடித்தார். அப்போதுதான் அவரது அரசியல் வாழ்க்கையில் அரசியல் காற்று அடிக்க ஆரம்பித்தது. பின்னர் 1989ல் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடந்தது. அப்போது முதன்முறையாக திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தமிழக அமைச்சரவையில் ரெட்டியார் சமுதாயத்திற்கு ஒரு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என கருண”நிதி விரும்பினார். அதைத்தொடர்ந்து மறைந்த திமுக முன்னணி தலைவர் அன்பில் தர்மலிங்கத்தின் சிபாரிசின்பேரில் தமிழக அமைச்சரவையில் மின்சார துறை, பால்வளத்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை ஆகிய துறைகளின் அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்ட”ர். 

அதைத்தொடர்ந்து கே.என்.நேருவின் அதிகார தோரணை, அடாவடித்தனம் ஆகியவை அவரை கரம் பற்றியது. அதன்பின்பு 1996ல் அதே லால்குடி தொகுதியில் நின்று வெற்றி பெற்று தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறை ஆகியவற்றின் அமைச்சராக இருந்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் 2006ல் தனது சொந்த தொகுதியான லால்குடியில் போட்டியிட பயந்து திருச்சி 2வது தொகுதிக்கு தாவினார் இந்த நேரு. அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர”க கடந்த 5 ஆண்டு க”லம் பணியாற்றினார். 

இதற்கிடையில் வெட்கக்கேடான ஒரு கூத்து அவரது அரசியல் வாழ்க்கையில் நடந்தது. அதாவது, 2001 சட்டப்பேரவை தேர்தலில் அவரது சொந்த தொகுதியான லால்குடியில் திமுக சார்பில் நின்றார். அவரை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா சாதாரண டீக்கடை நடத்தி வந்த பாலன் என்பவரை அதிமுக சார்பில் நிறுத்தினார். அந்த தேர்தலில் நேரு மண்ணை கவ்வினார். அதுவும் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு சரிவை ஏற்படுத்தியது. 

இந்த நிலைமையில் 3 முறை தமிழக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. 1996-2001 கால கட்டத்தில் முன்னாள் அமைச்சர் நேரு வருமானத்திற்கு மீறி சொத்த சேர்த்த வழக்கு திருச்சி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. இது ஒருபுறம் இருக்க தற்போது நேருவுக்கு திருச்சி ம”நகர மக்கள் ஒரு புதிய பெயரை சூட்டியுள்ள“ர்கள். அதுதான் நிலஅபகரிப்பு நாயகன் என்ற பெயர் ஆகும். 

அத”வது கடந்த திமுக ஆட்சியின்பே”து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் பைப”ஸ் ரே”டு செல்லும் வழியில் திருச்சி ம”வட்ட திமுக அலுவலகம் கலைஞர் அறிவ”லயம் என்ற பெயரில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை கட்ட பல பிரமுகர்களை மிரட்டி கலைஞர் அறிவ”லயம் கட்ட நிலங்கள் வ”ங்கப்பட்டது. இதில் ஒரு பகுதி தமிழ்ந”டு வக்பு வ”ரியத்துக்கு செ”ந்தம”னது. அந்த வ”ரியத்திற்கு செ”ந்தம”ன நிலத்தையும் கைப்பற்றி அதில் கலைஞர் அறிவ”லயம் பிரம்ம”ண்டம”க கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் தற்பே”தைய மதிப்பு 100 கே”டி ரூப”ய் இருக்கும் என கூறப்படுகிறது. 

இதுத”ன் கே.என்.நேருவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ள ஒரு வழக்கு ஆகும். அத”வது, கலைஞர் அறிவ”லயம் கட்டப்பட்ட க”லகட்டத்தில் திருச்சி ம”வட்டம் துறையூர் பாலக்கரை பகுதியை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவில் ஒரு புகாரை கொடுத்த”ர். சுமார் 16 ஆயிரம் சதுர அடிக்கு மேல் தனது நிலத்தை மிரட்டி முன்ன”ள் அமைச்சர் கே.என்.நேரு அவரது தம்பி கே.என்.ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, தற்போதைய லால்குடி திமுக எம்.எல்.ஏ செளந்தரபாண்டியன், துணை மேயர் அன்பழகன், மாவட்ட  துணை செயலாளர் குடமுருட்டி சேகர், ஜவுளிக்கடை அதிபர் சுந்தரராஜூலு, நில புரோக்கர் ஷெரீப், பந்தல் காண்ட்ராக்டர் மாமுண்டி உள்ளிட்ட 11 பேர் அபகரிப்பு செய்ததாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.

அதன்மீது விச”ரணை நடத்திய திருச்சி மாநகர போலீசார் கே.என்.நேரு, கே.என்.ராமஜெயம் உள்ளிட்ட 9 பேர்களை கைது செய்து திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள். அந்த வழக்கு மீது விசாரணை நடந்து வருகிறது. தற்போது கே.என்.நேரு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதேபோல நாமக்கல்லை சேர்ந்த கதிர்வேல் என்பவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பக்கமுள்ள தனது ஓட்டலை கே.என்.நேரு உள்ளிட்ட சிலர் மிரட்டி அபகரிப்பு செய்ய முயற்சித்ததாக புகார் கொடுத்தார். அதன்மீது விசாரணை நடந்து வருகிறது. 

திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த சாலமன் தேவராஜ் என்பவர் தனக்கு சொந்தமான திருச்சி ஏர்போர்ட் பக்கமுள்ள 50 கோடி மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினர் அபகரிப்பு செய்து கொண்டதாக திருச்சி மாநகர குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீதும் தற்பே”து விச”ரணை நடந்து வருகிறது. 

இது ஒரு புறம் இருக்கு திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஒரு புகார் வந்தது. அத”வது, கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு மீறி சொத்துக்களை சேர்த்ததாக முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது ஒரு வழக்கு பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கே.என்.நேருவின் அலுவலகம் அவரது பங்கள“க்கள், நேருவின் சகே”தரர்கள“ன கே.என்.ராமஜெயம், கே.என்.மணிவண்ணன், கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரது பங்கள“க்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை அதிரடி சே”தனை நடத்தினார்கள். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தஸ்த”வேஜூக்கள், ஆவணங்கள் சிக்கியது. இது தவிர வங்கி பாஸ் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது. 

இதனிடையே கடந்த சட்டமன்ற பொதுதேர்தலின்போது தற்பே”தைய முதல்வர் ஜெயலலிதா திருச்சி புத்தூர் ந”ல்ரோட்டில் மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையை ஆதரித்து பேசினார். அப்பே”து அவர் கே.என்.நேரு திருச்சி மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கர்களை அபகரிப்பு செய்து வைத்திருப்பத”க குற்றம் சாட்டியதோடு, திருச்சி தில்லைநகரில் உள்ள பங்கள“க்களில் கே.என்.நேருவுக்கு மட்டும் ஏராளமான பங்களாக்கள் உள்ளதாக முதல்வர் குற்றம் சாட்டி பேசினார். 

அதேபோல்தான் நேற்று முன்தினம் திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர் பரஞ்சோதியை ஆதரித்து பேசியபோது கே.என்.நேருவுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பினாமி பெயரில் வாங்கி குவித்தவர்தான் இந்த நேரு என்று சுட்டிக்காட்டி பேசினார். இவைகளையெல்லாம் பார்க்கும்போது கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் நேரு அதிகார பலத்துடன் இருந்து கொண்டு நிலங்களை வாங்கி குவித்தார் என கூறப்படுகிறது. எனவேதான் இந்த மேற்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கே.என்.நேருவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பேசியதை இன்னும் அந்த தொகுதி மக்களின் காதில் ரிங்காரமாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இதற்குதான் கே.என்.நேருவின் மறுபெயர் நிலஅபகரிப்பு நாயகன் என பொதுமக்கள் புணைப்பெயரை சூட்டியுள்ளார்கலோ என தெரியவில்லை. ஆகமொத்தம் கே.என்.நேருவின் தகிடுதித்தங்கள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை திருச்சி பொதுமக்கள் மறக்க தயாராக இல்லை. இதற்கு பொதுமக்கள் பதில் சொல்லும்நாள்தான் வரும் அக்டோபர் 13ந்தேதி ஆகும்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்