முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாயத்துமுதல் பாராளுமன்றம் வரை காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்-தங்கபாலு

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரைஅக்.- 11 - பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளுமன்றம் வரை இனி காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மதுரையில் தெரிவித்தார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று மதுரை வந்தார். மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சிலுவை போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் பொதுமக்களிடம் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அரசியல் சட்ட திருத்தத்தின் படி பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டு வந்தார். இந்த சட்டத்தால் ஏழை மக்கள்  பயனடைந்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிறைய அதிகாரங்கள் உள்ளன. ஆனால் தற்போது அனைவரும் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். அதே போல் அந்தந்த கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்புக்களே திட்டங்களை தீட்டி நிறைவேற்ற வேண்டும். இதற்கான அதிகாரத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
   கிராம பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை காங்கிரஸ் கட்சி தனித்து  போட்டியிடும் வலிமை பெற்றது. இனி வரும் காலங்களில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். இந்த உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீதம் மகளிருக்காவும், 40 சதவீதம் இளைஞர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள். மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் சிலுவை ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர். அவர் பொதுமக்களுக்கு அறிமுகமானவர் என்றார். பேட்டியின் போது மாநகர் தலைவர் தெய்வநாயகம், முன்னாள் எம்பி ராம்பாபு, மேயர் வேட்பாளர் சிலுவை ஆகியோர் உடனிருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்