முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறன் சகோதரர்கள் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு வெறும் நாடகம்-ஜெயலலிதா பேட்டி

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.- 12 - மாறன் சகோதரர்கள் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தி இருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஏர்செல் நிறுவனத்தை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தது குறித்து தயாநிதிமாறன், கலாநிதிமாறன் வீடுகளில் நேற்று முன்தினம் 10 மணி நேரம் சி.பி.ஐ. சோதனை செய்தது. முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்று உள்ளனர்.  மாறன் சகோதரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. நடத்திய சோதனை குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:- கேள்வி: நேற்று (நேற்று முன்தினம்) மாறன் சகோதரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை செய்து உள்ளார்களே?  பதில்: மாறன் சகோதரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருப்பது மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு நாடகம். இந்த சோதனையில் ஏதாவது வெளியே வரும். ஆனால் இந்த சோதனை மக்களை ஏமாற்றும் வேலையாகும்.  கேள்வி: இதுவரை கடந்த 4 வருடங்களாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் எந்த மாதிரி நடவடிக்கைகள் நடந்து உள்ளது?  பதில்: மாறன் சகோதரர்கள் கடந்த 4 வருடத்தில் இந்த ஊழல் சம்பந்தமான எந்த டாக்குமெண்ட்டுகளும் அவர்களது அலுவலகம் மற்றும் வீடுகளில் வைத்து இருப்பார்களா? அதனால் நாம் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சோதனையில் ஏதாவது வெளியே வருகிறதா? என்பது என் கருத்து.  கேள்வி: கூடங்குளம் பிரச்சினையில் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்படுமா? 

பதில்: நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி விட்டோம்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்