முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம்: வல்லுநர் குழு விரைவில் அறிவிக்கப்படும் - நாராயணசாமி

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். - 12 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு தன்மையை ஆராய்வதற்காக மத்திய அரசு அமைக்கவுள்ள வல்லுநர் குழுவினர் இடம் பெறுவோரின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.  புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,  கூடங்குளம் அணுமின் நிலையம் 12 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்து இப்போது தொடங்கப்படும் நிலையில் இருக்கிறது. இப்போது போராட்டக் குழு அமைத்து அப்பகுதி மக்களை திரட்டி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசுவதற்காக பிரதமர் என்னை அங்கு அனுப்பி இருந்தார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் பேசினேன். அந்த விவரங்களை பிரதமரிடமும், பிரதமர் கூறிய விவரங்களை தமிழக முதல்வரிடமும் கூறினேன். இதைத் தவிர தமிழக முதல்வர் கூறியதையொட்டி தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழு பிரதமரை சந்தித்தது.
அப்போது அணு மின் நிலையத்தின் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார். நாட்டில் மின் தேவை அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை 2 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கிறது. அதில் 850 மெகாவாட் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் டிசம்பருக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று பிரதமர் கூறினார். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்