முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அமைச்சர் கே.பி.பி.சாமி ஆள் கடத்தில் வழக்கில் மீண்டும் கைது

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 12 - ஆள் கடத்தில் வழக்கில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொலை குற்றச்சாட்டில் சிறையிலிருக்கும் கே.பி.பி.சாமி மற்றும் சகோதரர்களை போலீசார் மீண்டும் கைது செய்தனர். தி.மு.க. ஆட்சியில் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.பி.சாமி. இவர் திருவொற்றியூர் தொகுதியில் இரண்டாம் முறையாக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க. வேட்பாளர் குப்பனிடம் தோற்று போனார். சாமி 2001-ல் அமைச்சர் ஆனவுடன் அவரது தம்பிகள் கே.பி.பி.சங்கர், கே.பி.பி.சொக்கலிங்கம் தலைமையில் ரவுடி கும்பல் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட கே.வி.குப்பம் மீனவர்களை விரட்டி அடித்தனர். 2001 முதல் 2006 வரை அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி கே.பி.பி.சாமி மற்றும் அவரது தம்பிகள் தனக்கு ஆகாதவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுனாமி நிதி பற்றி கணக்கு கேட்டதற்காக செல்லதுரை என்ற மீனவரை அமைச்சர் கே.பி.பி.சாமியின் காரில் கடத்தி படுகொலை செய்ததாக போலீசிஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையொட்டி கே.பி.பி.சாமியின் தம்பிகள் கே.பி.பி.சங்கர், கே.பி.சொக்கலிங்கம் அடியாட்கள் யோபு, டைசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறிது நாள் கழித்து கே.பி.பி.சாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே வேலு என்ற மீனவரை கடத்தியதாகவும், அவரை கொலை செய்துவிட்டதாகவும் அவரது மனைவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை அடுத்து மேலும் ஒரு வழக்கு சாமி மேல் போடப்பட்டது. நேற்று போலீசார் பிரிவு 147,148,120 (பி) 364 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர்கள் கே.பி.பி.சங்கர், கே.பி.பி.சொக்கலிங்கம் ஆகியோரை மீண்டும் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்