முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருதுமால் நதியை சுத்தப்படுத்தி தடுப்புச்சுவர் கட்டப்படும் ராஜன்செல்லப்பா

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரைஅக்.- 12 - மதுரை நகரின் மையப்பகுதியில் செல்லும் கிருதுமால் நதியை சுத்தப்படுத்தி இரு புறமும் தடுப்புச்சுவர் கட்டி சுத்தமான வாய்க்காலாக மாற்றுவேன் என்று அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பிரச்சாரத்தில் உறுதிப்பட தெரிவித்தார்.   மதுரை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா திடீர்நகர், எல்லீஸ்நகர், ரயில்வே காலனி ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். பின்னர் பசுமலை, முனியாண்டி புரம், ஆர்.வி.பட்டி, பாலாஜி நகர், மதுரை தெற்குவாசல், மீனாட்சி பள்ளம், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், சப்பாணி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வி.வி.ராஜன்செல்லப்பா பிரச்சாரம் செய்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது பொதுமக்களிடையே வி.வி.ராஜன்செல்லப்பா பிரச்சாரம் செய்து பேசியதாவது, மதுரை நகரின் மைய பகுதியில் திடீர்நகர், மீனாட்சி பள்ளம் வழியாக செல்லும் கிருதுமால் நதியை தூர்வாரி இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டி சுத்தமான தண்ணீர் செல்லும் பெரிய வாய்க்காலாக மாற்றி தருவேன். திடீர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும். மேலவாசல் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், நவீன கழிப்பறைகள் கட்டித்தரப்படும்.    கடந்த திமுக ஆட்சி காலத்தில் மதுரை மாநகராட்சியை கொள்ளையடிப்பதை மட்டும் கருத்தில் கொண்டு திமுகவினர் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை தீட்டி  பாதியிலே விட்டுவிட்டு பல கோடி ரூபாய்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதனால் இன்றைக்கு மதுரை மாநகராட்சி திவாலாகி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மதுரை மாநகராட்சி அதிமுக வெற்றி பெற்றவுடன் மீட்கப்படும். தமிழக முதல்வர் அம்மாவிடம் இது பற்றிய விசயங்களை எடுத்துக்கூறி அதிக நிதியை பெற்று மதுரை மாநகராட்சி மறுமலர்ச்சி அடைய செய்யப்படும். எனவே இது போன்ற நல்ல பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக வரும் தேர்தலில் நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

----

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்