முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு: அக்டோபர் 17- 19 தேதிகளில் விடுமுறை

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 12 - தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு தினமான அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழகத்தில் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  இதையொட்டி முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் அக்டோபர் 17, திங்கட் கிழமை அன்றும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடக்கும் அக்டோபர் 19, புதன் கிழமை அன்றும் அரசு விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது. இதன்படி அக்டோபர் 17 தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு சார்ந்த அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், அக்டோபர் 19 அன்று வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இதேபோல் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவை தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago