முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மதுரை- நெல்லை- தூத்துக்குடி மாநகராட்சிகளில் ஜெயலலிதா பிரச்சாரம்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். - 13 - மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மேயர் மற்றும் மாமன்ற வேட்பாளர்களை ஆதரித்து இன்று (அக்.13) சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (13-ந் தேதி) முதல் 3 நாட்கள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சூறாவளி பிரச்சாரம் செய்கிறார். இன்று (13-ந் தேதி) தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய நகரங்களிலும், நாளை (14-ந் தேதி) சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் அ.தி.மு.க. மேயர் மற்றும் மாமன்ற கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்தும், 15-ந் தேதி வேலூர், சென்னையில் போட்டியிடும் மேயர் மற்றும் மாமன்ற கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்தும் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்.   திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று (13-ந் தேதி) நடைபெறுகிறது. இங்கு மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி, திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளர் ஜெயா மற்றும் மாமன்ற வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 9-ந் தேதி முதல்வர் ஜெயலலிதா வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். 7 இடங்களில் மக்கள் மத்தியில் பேசினார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். மலைக்கோட்டை மாவட்டம் ஜெயலலிதாவின் பக்கம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் மக்களின் எழுச்சி இருந்தது.  இதனையடுத்து  மீதியுள்ள 9 மாநகராட்சிகளில் முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  17.10.2011 அன்று நடைபெற உள்ள சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா (இன்று 13-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி சனிக்கிழமை வரை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கீழ்கண்டவாறு தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். 

13.10.2011 (வியாழக்கிழமை)- தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை. 14.10.2011 (வெள்ளிக் கிழமை)- சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், 15.10.2011 (சனிக்கிழமை)- வேலூர், சென்னை. 

நெல்லை, தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று (13-ந் தேதி) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். இதற்காக தனி விமானத்தில் அவர் காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுகிறார். அவரது விமானம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்தை 11.30 மணிக்கு சென்றடைகிறார். அங்கு அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். 

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பலர் 12 மணிக்கு நெல்லை செல்கிறார். அதைத் தொடர்ந்து வாகையடி முனையில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி சங்கரப்பேரிக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடி அண்ணாநகர் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். 

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வருகிறார். மதுரை ரிசர்வு லைன் பகுதியில் உள்ள திடலில் ஹெலிகாப்டரில் பிற்பகல் 3 மணி அளவில் ஜெயலலிதா வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலமாக புதூர் வருகிறார். அங்கு மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் மற்றும் வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பின்னர் மீண்டும் கார் மூலமாக ரிசர்வு லைன் சென்று ஹெலிகாப்டர் மூலமாக மதுரை விமான நிலையத்துக்கு செல்கிறார். விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்