முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்ற வெளிநாட்டினர் எண்ணிக்கை உயர்வு

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக். - 13 - இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.  தற்போது நம் நாட்டில் சுமார் 40 ஆயிரம் வெளிநாட்டினர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள். மேலை நாடுகளில் பொருளாதார சீர்குலைவு காரணமாக வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் வேலை வாய்ப்பு தேடுவது மேல் நாட்டு இளைஞர்களுக்கு நிர்பந்தமாகிறது.  இந்தியாவில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பு வசதி, ஆரோக்கிய பராமரிப்பு, மின் மற்றும் எரிசக்தி, எண்ணெய், வாகன உற்பத்தி, மருந்து ஆகிய துறைகளில் அதிகளவில் வெளிநாட்டினர் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.  நிறுவனங்களில் உயர் பதவியில் இருந்து நடுத்தர மற்றும் அறிமுக நிலை பதவிகள் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரிதாக உள்ள மூலக்கூறுகள் ஆய்வு போன்ற துறைகளில் போதிய திறமை உள்ளவர்கள் நமது நாட்டில் கிடைப்பதில்லை என்பதால் தகுதிவாய்ந்த வெளிநாட்டினர் அதிகளவில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. கலாச்சார மாற்றம் மற்றும் மொழி பிரச்சினை காரணமாக ஆண்டுக்கு இவர்களில் 10 சதவீதம் பேர் தங்கள் தாய்நாடுகளுக்கு திரும்புவதையும் காண முடிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்