முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரேவுக்கு திக் விஜய்சிங் எழுதிய கடிதம்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

டெல்லி, அக்.- 13 - அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கடிதம் எழுதியுள்ளார்.  ஹரியானா மாநிலத்தில் ஹிசார் பாராளுமன்றத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்ற சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் அன்னா ஹசாரேவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:​
பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உங்கள் மூலமாக அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். ஊழல்வாதிகளுடன் சேர்ந்து ஊழலுக்கு எதிராக போராடினால் அதை எப்படி ஒழிக்க முடியும்? உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் யார் பயனடைகிறார்கள்? என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் காங்கிரசை எதிர்த்தால் பிறகு யாரோடு இருக்கிறீர்கள்? காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ளவர்கள் உங்களைக் குழப்புகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் உங்களுக்கு ஆதரவளித்துள்ளார். அதனால் உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் உங்களுக்கும் தொடர்புள்ளது என்று நான் எப்போது கூறினாலும் என்னை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள். கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர பாரதிய ஜனதாக் கட்சி எதுவும் செய்ததில்லை. இவ்வாறு திக்விஜய்சிங் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து திக்விஜய்சிங் மேலும் கூறுகையில், அன்னாவுக்கு எந்த அரசியல் கட்சிகளும் ஆதரவில்லை என்று சொன்னால் அவர் ஏன் பா.ஜ.க.வைப் பற்றி வாய்திறக்கவில்லை? லோக்பால் மசோதா குறித்து அவர் போட்ட 3 நிபந்தனைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட பிறகும் அவர் ஏன் எங்கள் கட்சிக்கு யாரும் வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார் என்பது புரியவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்