முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள்இயக்க வேட்பாளர்கள் விலகவேண்டும்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்செந்தூர் அக்.- 13. - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் விலக வேண்டும்  கொடி, படம், பெயர் போட தடை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் பிரபல இயக்குநரும், நடிகர் விஜயின் தகப்பனாருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து விட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியயாவது. தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து உள்ளேன். விஜயின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக அணி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனியாக போட்டியிடுகின்றது . விஜயின் மக்கள் இயக்க தொண்டர்கள் தமிழக உள்ளாட்சி தேர்தலில்  சுமார் 1200 இடங்களுக்கு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஆனால் விஜயின் மக்கள் இயக்கம் இந்த தேர்தலில் அதிமுக அணிக்கு ஆதரவாக செயல்பட முடிவு செய்துள்ளது. இந்த இயக்கம் மக்கள் இயக்கம். அரசியல் கட்சி அல்;ல. விஜயின் முடிவே இறுதியானது. திருநெல்வேலி மேயர் பதவிக்கு மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மாரியப்பன் பிஜேபி ஆதரவுடன் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிலிருந்து இயக்கத்தினர் அனைவரும் விலக வேண்டும். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டும். இயக்கத்தின் கட்டுபாட்டை மீறி யாரேனும் போட்டியிட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  அவர்கள் இயக்கத்தின் பெயரையோ, படத்தையோ, கொடியையோ விஜயின் பெயரையோ பயன்படுத்த கூடாது. மேலும் இயக்க தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் அவர்களுக்கு  ஆதரவாக செயல்பட கூடாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நல்லதல்ல. அப்படி செய்தால் அந்த இயக்கத்தால் வளர முடியாது. இந்த தேர்;தலில் அதிமுக தனியாக போட்டியிடுவதால் அதிமுகவிற்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து உள்ளோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago