முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக வேட்பாளர்ராஜன் செல்லப்பாவை ஆதரித்து செல்லூர் ராஜூ பிரச்சாரம்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,அக்.- 13 - மதுரை சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் பகுதிகளில் அதிமுக மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பாவை ஆதரித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேற்று வீதி,வீதியாக திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தார்.    மதுரை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் 88வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.வீரணன் ஆகியோரை ஆதரித்து நேற்று சோலையழகுபுரம் பகுதியில் பிரச்சாரத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கினார். அப்பகுதியில் உள்ள வீதிகளில் தெருத்தெருவாக திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தார். அதனைதொடர்ந்து ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று அமைச்சர் செல்லூர் ராஜூ பிரச்சாரம் செய்தார். அந்த பகுதியில் 89வது வார்டு அதிமுக வேட்பாளர் செ.பூமிபாலனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, மதுரையை கொள்ளையடித்த மு.க.அழகிரியின் கொள்ளை கும்பலை கடந்த தேர்தலில் ஓட,ஓட விரட்டியடித்து  தமிழகத்தின் முதல்வராக அம்மாவை அரியணையில் அமர்த்தினீர்கள். அதனால் முதல்வர் அம்மா அவர்கள் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வழங்கி வருகிறார். அவர் எண்ணியதை போல அந்த நலத்திட்ட உதவிகள் அடித்தட்டு மக்களுக்கும் வந்து சேர்வதற்கு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதே வெற்றி எதிரொலிக்க வேண்டும். அப்படி எதிரொலித்தால்தான் அதிமுக வேட்பாளர்கள் அதிகாரத்தில் அமர்வார்கள். அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேர்வதற்கு நாங்கள் பாடுபடுவோம். எனவே வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மேயர்  வேட்பாளர் ராஜன்செல்லப்பா மற்றும் வார்டு அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து நீங்கள் அமோக வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்  பேசினார்.   பிரச்சாரத்தில் மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் அ.மா.பரமசிவம், வளர்மதி ஜெபராஜ், மாமன்ற குழு தலைவர்  பெ.சாலைமுத்து, எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மதுரை மத்திய தொகுதி கழக இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ், 88வது வட்ட பேரவை செயலாளர் எஸ்.எம்.டி.ரவி, வழக்கறிஞர்கள் தமிழ்ச்செல்வன், ரமேஷ், ஐபிஎஸ் பாலமுருகன், நிலையூர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்