முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை பெறும்-சரத்குமார்பேட்டி

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,அக்.- 13 - தமிழக மக்களுக்கு தொடர்ந்து செய்து வரும் நலத்திட்டங்களினால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மதுரையில் தெரிவித்தார்.   மதுரை மேயர் அதிமுக  வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மற்றும் அதிமுக வார்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மதுரை வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, கடந்த 10ம் தேதி முதல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறேன்.அனைத்து மாநகராட்சியிலும் அதிமுக மேயர் வேட்பாளர்கள் மற்றும் வார்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். எங்கள் கட்சி தொண்டர்களும் உற்சாகத்துடனும், உண்மையுடனும் அதிமுக வெற்றிக்காக உழைத்து வருகிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களை மக்கள் கொடுத்தார்கள். இதன் பயனாக தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடந்து வருகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அதிமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள் நான் சென்ற இடங்களில் எல்லாம் அதிமுகவுக்கு அமோக ஆதரவு இருப்பதை உணர்ந்தேன்.     உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர அதிமுகவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். மேலும் தேமுதிக விலகியதால் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு இல்லை. உலகத்திலேயே மாணவர்களுக்கு இலவச கணினி கொடுத்த அரசு இந்த அரசுதான். ஏழை மாணவர்களும் தற்போது கம்ப்யூட்டர் மூலம் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை. மக்களுக்காக சிந்தித்து செயல்படுகின்ற ஆட்சி இது. அதனாலாயே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். மாறன் சகோதரர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இது கண்துடைப்பு என்று கூறினாலும் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் நிலை. மகள் கனிமொழியாக இருந்தாலும், பேரன்களாக இருந்தாலும் நான் அவர்களுக்காக பேசுவேன் என்று சொல்லும் திமுக தலைவர் கருணாநிதி தன் மக்களுக்காக மட்டும் கவலைப்படாமல் நாட்டு மக்களுக்காகவும் கவலைப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உடன் மண்டல செயலாளர் ஈஸ்வரன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்