முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மேற்கு தொகுதியில் 65சதவீதம் ஓட்டுப் பதிவு

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, ஆக.14 - திருச்சி: மந்தமாக ஆரம்பித்து, விறுவிறுப்பாகி, பின்னர் மீண்டும் மந்தமாக நடந்த திருச்சி மேற்குத் தொகுதி வாக்குப் பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. தோராயமாக 61 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி, திமுக சார்பில் கே.என்.நேரு உள்பட மொத்தம் 16 வேட்பாளர்களுடன் இடைத் தேர்தல் களம் களை கட்டியிருந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் என எந்த பிற அரசியல் கட்சியும் பங்கேற்கவில்லை.

 

அனல் பறக்க நடந்த தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இருந்த அளவுக்கு இந்த முறை விறுவிறுப்பு இல்லை. காலையிலிருந்தே மந்த கதியில்தான் வாக்குப் பதிவு நடந்தது. பிற்பகல் வாக்கில்தான் சற்று வேகம் பிடித்தது.

 

இருப்பினும் மாலையில் மீண்டும் வாக்குப் பதிவில் தேக்க நிலை காணப்பட்டது. இதனால் பெரிய அளவிலான வாக்குப் பதிவு சதவீதத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவுக்கு வாக்குப் பதிவின்போது கிட்டத்தட்ட 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. துல்லியான வாக்குப் பதிவு விவரம் பின்னர் தெரிய வரும். 5 மணிக்கு முன் வந்து வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. அவர்கள் முழுமையாகவாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

 

உறையூரில், கிழக்கு மாநகராட்சி அரசுப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வேறு இயந்திரம் பொருத்தப்பட்டு பின்னர் வாக்குப் பதிவு தொடர்ந்தது. இதனால் சற்று நேரம் தாமதம் ஆனது. அதிமுக வேட்பாளர் மு.பரஞ்சோதிக்கு இந்த தொகுதியில் ஓட்டு இல்லை என்பதால் அவர் இன்று ஓட்டளிக்கவில்லை. பரஞ்சோதி, ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்தவர். அங்குதான் அவரது வீடும், ஓட்டும் உள்ளது. இதனால்தான் அவரால் அவர் போட்டியிடும் திருச்சி மேற்குத் தொகுதியில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது.

 

தொகுதிக்குப் பக்கத்தில் இருந்தும் ஓட்டு இல்லாததால் போட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் பரஞ்சோதி. திமுகவேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மக்கள் மன்றம் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செல்வராஜும் வாக்களித்தார். அதேபோல மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக எம்.பி. குமார் ஆகியோரும் வாக்களித்தனர். திருச்சி மேற்குத் தொகுதியில் மொத்தம் 2,08,247 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை 1,02,924 பேர் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 1,05,497 பேர். 6 திருநங்கைகளும் உள்ளனர்.

 

மொத்தம் 240 வாக்குச் சாவடிகள் வாக்குப் பதிவுக்காக அமைக்கப்பட்டன. அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு அங்கெல்லாம் 6 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 20ம் தேதி இங்கு பதிவாகும் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்