முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு கடை வைக்க 2 நாளில் இடம் ஒதுக்கித்தர உத்தரவு

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.14 - தீவுத்திடலில் பட்டாசு கடை வைப்பதற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு 2 நாளில் இடம் ஒதுக்கித்தரவேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: தீவுத்திடலில் பட்டாசு கடை வைக்க 2 நாளில் லைசென்சு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு கடை வைக்க உரிமம் கேட்டு 100 -க்கும் அதிகமான வியாபாரிகள், உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது

உயர்நீதிமன்ற உத்தரவின்படி தீவுத்திடலில் மட்டும் பட்டாசு கடை வைக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை தீவுத்திடலில் யாருக்கும் இடம் ஒதுக்கப்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் எங்கு கடை வைப்பது என்று தெரியாமல் இருப்பதால் நாங்கள் பாதித்துள்ளோம். எனவே அந்தந்த பகுதியில் கடை வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ரமேஷ் ஆஜராகி தீவுத்திடலில் 200 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு லைசென்சு கொடுக்கப்படும் என்றார்.

இந்த வழக்கு விசாரனை நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி எல்லா வியாபாரிகளும் பட்டாசு கடை வைப்பதற்கு சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வேண்டும். அந்த மனுவுக்கு கமிஷனர் அலுவலகத்தினர் வரிசை எண் வழங்கிட வேண்டும். அந்த தொடர் வரிசை எண்ணின்படி தீவுத்திடலில் இடம் ஒதுக்கிட வேண்டும். அதுவும் மனு கொடுத்த 2 நாட்களுக்குள் இடத்தை ஒதுக்கி தர வேண்டும். அங்கு மனுதாரர்கள் தற்காலிக கடைகளை நிறுவ வேண்டும். கடைகள் நிறுவியபிறகு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வந்து இடத்தை பார்வையிட்டு உடனே லைசென்ஸ் வழங்க வேண்டும். இவை அனைத்து செயல்பாடுகளும் 18.10.11 -குள் நடவடிக்கை எடுத்து முடித்தாக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்